கோழிக்கோடு அருகே இன்று திருமணம் ஆக இருந்த நிலையில் நர்சு திடீர் தற்கொலை

கேரளா மாநிலம் கோழிக்கோடு அருகே இன்று திருமணம் ஆக இருந்த நிலையில் நர்சு திடீர் தற்கொலை செய்த சம்பவத்தால் திருமண வீடே சோகமாக மாறியது.
தற்கொலை
தற்கொலை
Published on

கொழிஞ்சாம்பாறை:

கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் சேவாவூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் பாபு. இவரது மகள் மேகலா (30). இவர் கோழிக்கோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்தார்.

அப்போது அதே ஆஸ்பத்திரியில் ஊழியராக பணிபுரியும் வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.

இவர்களது காதல் விவகாரம் இருவீட்டு பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் 2 பேருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

இன்று மேகலாவுக்கு, அவரது காதலனுடன் திருமணம் நடக்க இருந்தது. இதனால் நேற்று முதலே அவர்களது வீடு, விழா கோலம் பூண்டிருந்தது. இன்று அதிகாலை திருமண மண்டபத்திற்கு செல்வதற்கு அனைவரும் தயாராகி கொண்டிருந்தனர்.

அப்போது, மணமகள் மேகலா குளித்து விட்டு வருவதாக கூறிவிட்டு தனது அறைக்கு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியில் வரவில்லை. அவரை தேடி உறவினர்கள் அறைக்கு சென்றனர்.

அறை பூட்டி இருந்தது. தட்டி பார்த்தும் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் அறை கண்ணாடியை உடைத்து பார்த்தனர்.

அப்போது, மேகலா அறையில் தூக்கில் தொங்கி நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அவரது பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து சேவாவூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் என்ன காதலர்களுக்கு இடையே ஏதேனும் தகராறு ஏற்பட்டதா, அதனால் அவர் தற்கொலை செய்து கொண்டரா என பல கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com