மிசோரமில் ஸ்வைன் ஃப்ளூ- பன்றி இறைச்சி மற்றும் பொருட்கள் இறக்குமதிக்கு தடை

பிற மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளில் இருந்து உயிருள்ள பன்றிகள், பன்றி இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சி உள்பட அனைத்து பன்றி இறைச்சி பொருட்கள் இறக்குமதிக்கு முழுமையான தடை விதிக்கப்படும் என்று மிசோரம் அரசு அறிவித்துள்ளது.
பன்றிக் காய்ச்சல்
பன்றிக் காய்ச்சல்
Published on

மிசோரம் மாநிலத்தில் புதிய ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் கண்டறியப்பட்டதை அடுத்து, பன்றிகள் மற்றும் பன்றி இறைச்சி பொருட்களை இறக்குமதி செய்ய அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

அடுத்த உத்தரவு வரும் வரை, பிற மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளில் இருந்து உயிருள்ள பன்றிகள், பன்றி இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி உள்பட அனைத்து பன்றி இறைச்சி பொருட்கள் இறக்குமதிக்கு முழுமையான தடை விதிக்கப்படும் என்று மிசோரம் அரசு அறிவித்துள்ளது.

பன்றிகள் ஏதேனும் அசாதாரணமாக உயிரிழந்தால் அதுகுறித்து உடனடியாகத் தெரிவிக்க 0389-2336441, 9436142908, 9436151203 மற்றும் 8794206212 ஆகிய உதவி எண்களையும் மிசோரம் அரசு வழங்கியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com