தேர்தல் நடக்கவுள்ள 5 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் படம் நீக்கம்

கடந்த ஆண்டு மார்ச்சில் நடந்த தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலின் போதும் இந்த மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் இடம்பெறவில்லை.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி:

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் சமீபத்தில் வெளியிட்டது. இதனால் அங்கு உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டன.

இந்நிலையில், தேர்தல் நடத்தை அமலாகி உள்ளதன் எதிரொலியாக, இந்த 5 மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் படம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கான மாற்றத்தை கோவின் தளத்தில் மத்திய சுகாதார அமைச்சகம் செய்யும்.  தேர்தல் கமிஷன் பரிந்துரை பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com