பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்குகிறது

இந்த ஆண்டின் முதலாவது பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி முடிகிறது.
பாராளுமன்றம்
பாராளுமன்றம்
Published on

புதுடெல்லி:

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் தேதி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. வரும் 31-ம் தேதி இந்த கூட்டத்தொடர் தொடங்குகிறது. இது இந்த ஆண்டின் முதலாவது கூட்டத்தொடர் ஆகும். 

மறுநாள் (பிப்ரவரி 1-ம் தேதி) இந்த நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுகிறார். பொது பட்ஜெட்டிலேயே ரெயில்வே பட்ஜெட்டும் அடங்கி இருக்கும். 

பட்ஜெட் கூட்டதொடர் இரு கட்டங்களாகநடைபெறுகிறது. முதல் கட்டமாக ஜனவரி 31 முதல் பிப்ரவரி 11ம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாம் கட்டமாக மார்ச் 14 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது.

ஏப்ரல் 8-ம் தேதிவரை மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com