என் மலர்
இந்தியா

முதல்வரை ஒருமையில் தரம்தாழ்த்தி பேசுவது அவதூறுதான் - உச்ச நீதிமன்றம்
- முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தன் மீதான அவதூறு வழக்குகளுக்கு தடைவிதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
- ஒரு மாநிலத்தின் முதல்வராக இருப்பவரை ஒருமையில் தரம் தாழ்த்தி பேசுவது என்பது அவதூறு தான்.
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தன் மீதான அவதூறு வழக்குகளுக்கு தடைவிதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,
ஒரு மாநிலத்தின் முதல்வராக இருப்பவரை ஒருமையில் தரம் தாழ்த்தி பேசுவது என்பது அவதூறு தான். அதை செய்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அதற்கான வழக்கை எதிர்கொண்டு தான் ஆகவேண்டும்.
மேலும் பொதுவாழ்வில் இருப்பவர்கள் விமர்சனத்தை வைக்கும்போது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என்று சி.வி.சண்முகத்துக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
Next Story






