வானிலேயே மறையும் மழைத்துளிகள்: வடமேற்குத் தொடர்ச்சி மலையில் நடப்பது என்ன?

வடமேற்கு தொடர்ச்சி மலைகளில் தரையை தொடும் முன்பே ஆவியாகும் 25% பருவமழை.
வானிலேயே மறையும் மழைத்துளிகள்: வடமேற்குத் தொடர்ச்சி மலையில் நடப்பது என்ன?
Published on

தென்மேற்குப் பருவமழையின் போது, வடமேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெய்யும் மழையில் கால் பகுதி, தரையை தொடுவதற்கு முன்பே நடுவானிலே ஆவியாவதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மழைத்துளி மூலக்கூறுகளில் உள்ள மிகச்சிறிய வேறுபாடுகளைச் சரிபார்க்கும் ஐசோடோப் பகுப்பாய்வைப் பயன்படுத்தி, காற்றில் எவ்வளவு மழை ஆவியாகிறது என்பதை புனேவில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் கண்டறிந்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு பெய்த பருவமழையை வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்ட நிலையில், தினசரி ஆவியாதல் விகிதம் 4% முதல் 61% வரை இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவியாதல், பொருட்களைக் குளிர்விப்பதோடு, மேகங்களின் செயல்பாட்டையும் மாற்றுகிறது என்பது தெரியவந்துள்ளது.

இந்த கண்டுபிடிப்பு இந்தியாவின் ஒட்டுமொத்த பருவமழை சுழற்சியைப் புரிந்துகொள்ளவும், வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் காலநிலை மாதிரிகளைமேலும் துல்லியமாக மாற்றவும் பெரிதும் உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com