மக்களவையில் பிரதமர் மோடி உரை: எதிர்க்கட்சியினர் அமளி... கோவமான சபாநாயகர் ஓம் பிர்லா

10 வருட கால சாதனை ஆட்சியால் நாங்கள் மூன்றாவது முறையாக வென்றுள்ளோம். மோடியின் உரைக்கு இடையே மணிப்பூர், நீட் உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து எதிர்க்கட்சியினர் முழக்கம்.
மக்களவையில் பிரதமர் மோடி உரை: எதிர்க்கட்சியினர் அமளி... கோவமான சபாநாயகர் ஓம் பிர்லா
Published on

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

அந்த உரையில், "10 வருட கால சாதனை ஆட்சியால் நாங்கள் மூன்றாவது முறையாக வென்றுள்ளோம். தொடர்ந்து மூன்றாவது முறையாக வாக்களித்து வெற்றி பெறுவது என்பது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். மதச்சார்பின்மைக்கு மக்கள் வாக்களித்துள்ளனர்.

இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கொள்கைகளை வகுத்து வருகிறோம். தேசத்திற்கு அவசியமான சீர்திருத்தங்களை நாங்கள் நடைமுறைப் படுத்தியுள்ளோம். அனைவருடனும், அனைவருக்குமான வளர்ச்சி என்பது எங்களது முதன்மையான தாரக மந்திரம்" என்று மோடி பேசி வருகிறார்.

மோடியின் உரைக்கு இடையே மணிப்பூர், நீட் உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்தும் சர்வாதிகாரத்தை நிறுத்துங்கள் என்றும் எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் தொடர் அமளிக்கு இடையே பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

இதற்கிடையே எதிர்க்கட்சியினர் அமைதியாக இருக்குமாறு மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா கோபத்துடன் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com