சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 3 பேருக்கு 90 ஆண்டுகள் ஜெயில் தண்டனை

வழக்கு தேவிகுளத்தில் உள்ள போக்சோ சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
90 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டவர்களை போலீசார் கோர்ட்டில் இருந்து அழைத்துச்சென்ற காட்சி.
90 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டவர்களை போலீசார் கோர்ட்டில் இருந்து அழைத்துச்சென்ற காட்சி.
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள பூப்பாறை பகுதியில் தனத காதலனுடன் சென்ற 14 வயது சிறுமியை 6 பேர் கொண்ட கும்பல் கூட்டு பலாத்காரம் செய்தது. உடனிருந்த காதலனை அடித்து விரட்டிவிட்டு அந்த 6 பேரும் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த அந்த சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர்.

கடந்த 2022-ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக சந்தப்பரா போலீசார் வழக்குப்பதிந்து, சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த நெல்லையை சேர்ந்த சுகந்த்(வயது20), போடியை சேர்ந்த சிவகுமார்(21), பூப்பாறையை சேர்ந்த சாமுவேல் என்கிற ஷியாம் உள்பட 6 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் சிறுவர்கள் ஆவர்.

அவர்களின் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு தேவிகுளத்தில் உள்ள போக்சோ சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் அந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட சுகந்த், சிவகுமார், சாமுவேல் ஆகிய 3 பேருக்கும் 90 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி சிராஜூதீன் உத்தரவிட்டார். மேலும் அவர்களுக்கு ரூ.40 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

அந்த அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 8 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, தண்டனைகளை ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். சிறுவர்கள் இருவர் மீதான விசாரணை தொடுபுழா சிறார் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com