தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ந்துள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்

தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ந்துள்ளதை மக்களவை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இந்தியாவின் மதிப்பு சர்வதேச அளவில் உயர்ந்து வருகிறது என்றார் பிரதமர்.
தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ந்துள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்
Published on

புதுடெல்லி:

பாராளுமன்ற மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பதிலளித்துப் பேசி வருகிறார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

அனைவரையும் உள்ளடக்கி, அனைவருக்குமான வளர்ச்சி என்பதே எங்களின் தாரக மந்திரம்.

இந்தியாவின் மதிப்பு சர்வதேச அளவில் உயர்ந்து வருகிறது.

வாக்கு வங்கி அரசியல் நாட்டை பிளவுபடுத்தும். இது நாட்டை நாசப்படுத்தியது

தமிழகத்தில் பாஜக வளர்ந்துள்ளதை மக்களவை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பாஜக கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது.

தமிழகத்தில் பாஜக வேட்பாளர்கள் கணிசமான இடங்களில் 2வது இடத்துக்கு வந்துள்ளனர்.

வளர்ச்சி அடைந்த தேசமாக இந்தியா மாறுவதை பார்க்க மக்கள் காத்திருந்தார்கள்.

2047-ல் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாற 24 மணி நேரமும் பணியாற்ற நாங்கள் தயார்.

அதனை மனதில் வைத்து திட்டங்களை தீட்டி வருகிறோம் என தெரிவித்தார்.

பிரதமர் மோடி பதிலுரையின் போது தமிழக எம்பிக்கள் மணிப்பூருக்கு நீதி வேண்டும் எனக்கோரி தமிழில் முழக்கமிட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com