பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ம் தேதி தொடக்கம்?

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் 21ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
பாராளுமன்றம்
பாராளுமன்றம்
Published on

புதுடெல்லி:

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை மாதம் 18 முதல் ஆகஸ்ட் 12 ம் தேதி வரை நடைபெற உள்ளது என தகவல் வெளியானது.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை நடத்துவதற்கு ராஜ்நாத் சிங் தலைமையிலான பார்லி விவகார அமைச்சரவை குழு பரிந்துரை செய்துள்ளது.

17 நாட்கள் நடக்கும் இந்தக் கூட்டத்தின்போது ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.

மேலும், பார்லி குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்ட 4 மசோதாக்கள் உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகின.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com