ஓடும் ரெயிலில் ஏற முயன்று தண்டவாளத்தில் சிக்கிய நர்சிங் மாணவி- பதற வைக்கும் சிசிடிவி காட்சி

தண்டவாளத்தில் நர்சிங் மாணவி தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சம்பவத்தில் மாணவி சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
ஓடும் ரெயிலில் ஏற முயன்று தண்டவாளத்தில் சிக்கிய நர்சிங் மாணவி- பதற வைக்கும் சிசிடிவி காட்சி
Published on

கேரளம் மாநிலம் கண்ணூர் மாவட்டத்தின் ரெயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் ஏற முயன்று தண்டவாளத்தில் நர்சிங் மாணவி தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கண்ணூரில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

அதில், நர்சிங் மாணவி நடைமேடையில் உள்ள கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தார். அதற்குள் ரெயில் கிளம்பியது. இதை கவனித்த மாணவி சற்றும் பதற்றப்படாமல் நடந்து சென்று ஓடும் ரெயிலில் ஏற முற்பட்டார்.

ரெயில் பெட்டி கதவின் பிடியை பிடித்து படியில் கால் வைக்க முயன்றபோது கால் இடறி தண்டவாளத்திற்குள் விழுந்தார்.

இதைக் கண்ட சக பயணிகள் கூச்சலிட்டனர். உடனடியாக அபாய சங்கிலி இழுத்து ரெயில் நிறுத்தப்பட்டது. பின்னர், தண்டவாளத்தில் சிக்கியிருந்த மாணவியை மீட்டனர்.

இந்த சம்பவத்தில் மாணவி சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com