2026-ல் தமிழகத்தில் என்டிஏ ஆட்சி அமையும்- அமித்ஷா

சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமியின் திடீர் பயணம் கூட்டணி குறித்தாக இருக்கலாம் என அரசியல் நிபுணர்கள் கருத்துடெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார்.
2026-ல் தமிழகத்தில் என்டிஏ ஆட்சி அமையும்- அமித்ஷா
Published on

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லிக்கு பயணம் செய்தார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.

எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகள் கூறுகையில், டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அ.தி.மு.க. அலுவலகத்தை காண செல்ல உள்ளதாக கூறினர்.

டெல்லி சென்றடைந்த எடப்பாடி பழனிசாமி அங்கு புதிதாக கட்டப்பட்டு காணொலி மூலம் திறந்து வைக்கப்பட்ட அதிமுக அலுவலகத்தை பார்வையிட்டார்.

பின்னர் பேசிய அவர், "பிரத்யேகமான நபரை பார்க்க வரவில்லை. டெல்லியில் திறக்கப்பட்டுள்ள எங்களது கட்சி அலுவலகத்தை பார்வையிடவே வந்துள்ளேன்" என்றார்.

இருப்பினும், சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமியின் திடீர் பயணம் கூட்டணி குறித்தாக இருக்கலாம் என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணிக்கு ஆயத்தமாகிறாரா எடப்பாடி பழனிசாமி என அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை சந்தித்த நிலையில் அமித்ஷா எக்ஸ் தளத்தில் இந்தி மற்றும் தமிழில் பதிவிட்டுள்ளார்.

அதில் 2026-ல் தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமையும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு மதுவெள்ளம், ஊழல் புயல் முடிவுக்கு வந்துவிடும் என்று கூறியுள்ளார்.

இவர்களுது சந்திப்பு இரண்டு மணி நேரம் நீடித்தது

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com