மக்களிடம் செலவை குறைக்க சொல்லும் பிரதமர் மோடி, கோடிக்கணக்கான ரூபாய் செலவில் வெளிநாடு செல்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்

மக்களுக்கு அறிவுரை கூறும் பிரதமர் எதையும் பின்பற்றுவதில்லை என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களிடம் செலவை குறைக்க சொல்லும் பிரதமர் மோடி, கோடிக்கணக்கான ரூபாய் செலவில் வெளிநாடு செல்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்
Published on

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேபரேலி நகரில் மக்களவை எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “வெளிநாட்டிற்கு செல்லாதீர்கள், தங்கத்தை வாங்காதீர்கள் என்றும், மின்சார வாகனங்களை வாங்குங்கள் என்றும் பிரதர் மோடி கூறுகிறார்.

வரும் காலங்களில் விவசாயிகளுக்கு உரம் கிடைக்காது. இன்னும் சில மாதங்களில் பணவீக்கம் எங்கே போகிறது என்று பாருங்கள்.

பெட்ரோல், டீசல், எண்ணெய், எரிவாயு, பருப்பு வகைகள் மற்றும் அரிசி ஆகியவற்றின் விலைகள் எங்கே செல்கின்றன என்று பாருங்கள்.

தங்கம் வாங்காதீர்கள், வெளிநாடு செல்லாதீர்கள் என்று வெளிப்படையாகக் கூறும் பிரதமர், ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள விமானங்களில் வெளிநாடு செல்கிறார்” என்று ராகுல் காந்தி கூறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com