மத்திய மந்திரிசபை விரைவில் மாற்றம் - 12 பேரை நீக்கிவிட்டு புதுமுகங்களை நியமிக்க திட்டம்

மந்திரிசபை மாற்றத்தில் 12 மந்திரிகள் மாற்றப்படலாம் என கூறப்படுகிறது.
மத்திய மந்திரிசபை விரைவில் மாற்றம் - 12 பேரை நீக்கிவிட்டு புதுமுகங்களை நியமிக்க திட்டம்
Published on

பா.ஜ.க. கட்சி தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி புரிந்து வருகிறது. இந்த 3-வது ஆட்சி அடுத்த மாதம் 9-ந் தேதி தனது 2-வது ஆண்டை நிறைவு செய்கிறது. இதனை முன்னிட்டு ஆட்சி அதிகாரத்தில் புதுப்பிப்புகளை செய்ய பா.ஜ.க. தலைமை ஆலோசித்து வருகிறது.

பிரதமர் மோடி 5 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்து தாயகம் திரும்பிய அன்று அனைத்து மந்திரிகளும் அடங்கிய மந்திரிசபை கூட்டத்தை கூட்டினார். சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பா.ஜ.க. ஆட்சியின் 12 ஆண்டுகால பணிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் உள்ள நிறை, குறைகள் விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக 3-வது ஆட்சியின் 2 ஆண்டு கால பயணம் எப்படி இருந்தது?, தற் போது மக்களிடையே உள்ள ஆட்சி மீதான பார்வை, மந்திரிகள் மற்றும் எம்.பி.க்களின் செயல்பாடு போன்றவை பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் மேற்கு ஆசிய போருக்கு பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அது மக்களிடையே ஏற்படுத்திய தாக்கங்கள், இதில் எடுக்கப்பட வேண்டிய எதிர்கால திட்டங்கள் பற்றியெல்லாம் விவாதிக்கப்பட்டது.

இறுதியாக மந்திரிசபை மாற்றம் பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இதுபற்றிய பேச்சு ஏற்கனவே இருந்து வந்தாலும், மந்திரிசபை கூட்டத்தில் இதனை ஆலோசித்தது முக்கியத்துவமாக பார்க்கப்பட்டது.

ஏற்கனவே நடந்த பேச்சுகளின் அடிப்படையில் ஜூன் மாத மத்தியில் மந்திரிசபையில் மாற்றங்கள் செய்யப்படலாம் என தகவல்கள் வந்தன. அதன்படியே இன்னும் 3 வாரங்களில் மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாக தற்போது தெரிய வந்துள்ளது. தற்போதைய மந்திரிகளில் சிலர் கட்சிப்பணிக்கு செல்கிறார்கள், கட்சிப்பணியில் உள்ள சிலர் மந்திரிகள் ஆகப் போகிறார்கள்.

இதற்கு முன்னோட்டமாக சில நடவடிக்கைகள் தொடங்கி விட்டன. மத்திய நிதித்துறையின் இணை மந்திரியாக இருந்த பங்கஜ் சவுத்ரி, உத்தரபிரதேச மாநிலத்தின் பா.ஜ.க. தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். அதுபோல சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை மந்திரி ஹர்ஷ்மல் கோத்ரா டெல்லி மாநில பா.ஜ.க. தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

இவர்களுக்கு பதிலாக புதுமுகங்களுக்கு மந்திரி பதவி கிடைக்கும் என கூறப்படுகிறது. சமீபத்தில் ஆம் ஆத்மியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்தவர்களுக்குக்கூட மந்திரி பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

மந்திரிசபை மாற்றத்தில் 12 மந்திரிகள் மாற்றப்படலாம் என கூறப்படுகிறது. இதில் தற்போதைய மந்திரிசபையின் மூத்த மந்திரிகள்கூட கட்சிப்பணிக்கு செல்லலாம் என தெரிகிறது. இதன்படி கர்நாடக மாநில பா.ஜ.க.வுக்கு ஒரு மூத்த மந்திரி தலைமை தாங்குவார் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோல மணிப்பூர் மாநிலம் மீதும் தீவிர கவனம் செலுத்தப்படுகிறது. அங்கு புதிய பா.ஜ.க. தலைவரை நியமிக்கவும், அங்கிருந்து ஒருவருக்கு முக்கிய மந்திரி பதவி வழங்கவும் ஆலோசனைகள் நடந்து வருகிறது.

மேலும் 70 வயது கடந்த மந்திரிகள், மாநிலங்களவை பதவிக்காலம் முடியும் தருவாயில் உள்ள மூத்த மந்திரிகளும் கட்சிப்பணிக்கு அனுப்பப்படலாம் என தெரிகிறது.

மந்திரிகள் கட்சிப்பணிக்கு மாற்றப்படுவது போல, செயல்திறன் குறைவான மந்திரிகளும் இதில் கணக்கெடுக்கப்பட்டு உள்ளனர். துறை ரீதியான செயல்பாடுகள் மட்டுமின்றி. அவர்களது மாநிலத்தில் கட்சி மேம்பாட்டுக்கு ஆற்றிய பணிகளும் இதில் கருத்தில் கொள்ளப்படுவதாக தெரிகிறது. இதன் அடிப்படையில் 3 இணை மந்திரிகளை பதவியில் இருந்து விலக்கவும் முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த 3 இணை மந்திரிகளில் ஒருவர் தென் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். மற்றொருவர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர். மேலும் ஒருவர் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர் என தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

கூட்டணிக் கட்சிகளுக்கும் மந்திரிசபையில் கூடுதல் வாய்ப்புகள் வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தெரிகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com