ஆயுள் தண்டனைக்கு வழிவகுக்கும் சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல்: அமித் ஷாவுக்கு பஞ்சாப் துணை முதல்வர் கடிதம்

பஞ்சாப் மாநிலத்தில் சீக்கிய மத புனித நூலை இழிவுப்படுத்தும் நோக்கத்தில் ஈடுபட்ட இருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சட்டம் நிறைவேற்ற மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.
சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா, அமித் ஷா
சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா, அமித் ஷா
Published on

பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்களின் புனித நூல் மற்றும் கொடியை அவமதிக்கும் வகையில் இருவர் இழிவான செயலில் ஈடுபட்டனர். இதனால் இருவரும் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அவமதிப்பு செயலில் ஈடுபட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் அரசியல் கட்சிகள், இருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

இதுபோன்ற அசம்பாவித செயல்கள் நடைபெறாத வண்ணம் தடுக்க, ஏற்கனவே பஞ்சாப் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெற்று தர வேண்டும் என பஞ்சாப் மாநில துணை முதல்வர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா  மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் (பஞ்சாப் திருத்தம்), இந்திய தண்டனைச் சட்டம் (பஞ்சாப் திருத்தம்) ஆகிய இரண்டு திருத்த மசோதாக்கல் கடந்த 2018-ம் ஆண்டு பஞ்சாப் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம், புனித நூல்களை இழிவுப்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும் நபர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வழிவகுக்கும்.

இந்த சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கிய நிலையிலும், குடியரசு தலைவர் ஓப்புதல் வழங்காமல் உள்ளார். தற்போது இருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த சட்டம் அவசியமானது. ஜனாதிபதி ஒப்புதல் பெற்று தர வேண்டும் என, அம்மாநில துணை முதல்வர் சுக்ஜிந்தர் சிந் ரந்தாவா மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் ‘‘ஸ்ரீ குரு கிராந்த் சாகிப் வாழும் குருவாக கருதப்படுகிறது. அது சீக்கியர்களின் வெறும் பொருள் மட்டுமல்ல. சீக்கியர்களின் மரியாதைக்குரியது.

பஞ்சாப் இந்திய எல்லையில் அமைந்துள்ள மாநிலம். சமூக நல்லிணக்கம் காக்கப்பட வேண்டியது மிக முக்கியமானது. இதனால் இழிவு செயல்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும். அதனால் சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் பெற்று, மாநில அரசுக்கு விரைவில் தெரிவிக்கமாறு கேட்டுக்கொள்கிறேன்.’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com