இங்கிலாந்து மன்னர் சார்லஸ்-ராணி கமிலா பெங்களூருவில் மூலிகை சிகிச்சை

தனித்துவமான சிகிச்சை மாதிரியை தம்பதியினர் பாராட்டினர்.மன்னர் சார்லஸ், கமிலா வருகை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
இங்கிலாந்து மன்னர் சார்லஸ்-ராணி கமிலா பெங்களூருவில் மூலிகை சிகிச்சை
Published on

பெங்களூரு:

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் கடந்த 18-ந் தேதி முதல் ஓசியானியா சுற்றுப்பயணத்தை மேற்கொண்டனர். பின்னர் ஆஸ்திரேலியா மற்றும் பசுபிக் தீவு நாடான சமோவாவிற்கு பயணம் செய்தனர்.

இங்கிலாந்து அரசு குடும்பத்தில் உயர் பதவியில் இருக்கும் மன்னர் மற்றும் ராணி ஆகியோர் சமோவா தீவு நாட்டிற்கு சென்று அங்குள்ள மக்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

இதற்கு முன் ராணி 2-ம் எலிசபத் அம்மக்களை சந்தித்து இருக்கும் நிலையில், இங்கிலாந்து மன்னராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக சார்லஸ் மனைவி கமிலா உடன் அங்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 26-ந் தேதி பயணத்தை முடித்தனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் புற்றுநோய் கண்டறியப்பட்ட பிறகு இது மன்னரின் முதல் வெளிநாட்டுப் பயணமாகும்.

அவர்கள் அங்கிருந்து திரும்பும்போது பெங்களூருவின் ஒயிட் பீல்டில் உள்ள சௌக்யா ஹெல்த் அண்ட் வெல்னஸ் நிலையத்தில் புத்துணர்ச்சி ஓய்வு எடுக்க முடிவு செய்தனர். அதன்படி கடந்த 26-ந்தேதி (சனிக்கிழமை) இரவு தம்பதி இருவரும் தனியார் ஜெட் விமானத்தில் புறப்பட்டனர்.

இந்திய அரசின் பாதுகாப்பு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் விமான நிலையத்தில் தரையிறங்கியது. இந்த விமான நிலையம் பொது, வணிகம் மற்றும் வி.ஐ.பி. விமான போக்குவரத்து, ராணுவ போக்குவரத்திற்கும் மட்டும் பயன்படுத்தப்படுகிறது.

ஹிந்துஸ்தான் ஏர்கிராப்ட் நிறுவனத்தால் நிறுவப்பட்ட இந்தியாவின் முதல் விமான தொழிற்சாலையின் தாயகமாக இந்த விமான நிலையம் ஜனவரி 1941-ம் ஆண்டு முதல் செயல்பட தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்த விமான நிலையத்தில் மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா இருவருக்கும் இந்திய நாட்டு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தம்பதி இருவரையும் இந்திய அரசின் உயர் அதிகாரிகள், கர்நாடக மாநில அரசின் உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து அரசு மரியாதையுடன் வரவேற்றனர்.

இதையடுத்து பெங்களூருவின் ஒயிட் பீல்டில் உள்ள சௌக்யா ஹெல்த் அண்ட் வெல்னஸ் நிலையத்தில் பாரம்பரிய மூலிகை சிகிச்சை சார்லஸ் மேற்கொண்டார். டாக்டர் ஐசக் மத்தாய் நூரனாலின் தனித்துவமான சிகிச்சை மாதிரியை தம்பதியினர் பாராட்டினர்.

இங்கிலாந்து அரச குடும்பத்தின் முழுமையான சுகாதார ஆலோசகரான டாக்டர் மத்தாய் விளங்குகிறார். இந்த சிகிச்சை மையம் அவருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. அவர் கூறியதன் பேரிலேயே மன்னர் சார்லஸ் தனது மனைவியுடன் இங்கு வந்து சிகிச்சை மேற்கொண்டதாக தெரிகிறது.

இன்று மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா புறப்பட்டு செல்கின்றனர். இங்கிலாந்து மன்னர் சார்லஸ், கமிலா வருகை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com