கேரளா பாலக்காடு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த 3 விண்வெளி வீரர்கள் - ஜூலை 15ல் சர்வதேச விண்வெளி பயணம்

கஜகஸ்தானில் உள்ள பைக்கோனூர் விண்வெளி ஏவுதளத்திலிருந்து, ரஷிய விண்வெளி வீரர்களுடன் இணைந்து அனில் மேனன் செல்ல உள்ளார்.
Anil Menon to fly to International Space Station on July 15
Published on: 

இந்திய வம்சாவளியை சேர்ந்த நாசா விண்வெளி வீரரான டாக்டர் அனில் மேனன், ரஷியாவின் சோயுஸ் எம்எஸ்-29 விண்கலத்தில் ஜூலை 15 அன்று, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட உள்ளார்.

இதன்மூலம் கேரளாவில் உள்ள பாலக்கோடு மாவட்டம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு மூன்றாவது வீரரை அனுப்பும் பெருமையை பெற்றுள்ளது.

இதையடுத்து கடந்த காலங்களில் போலாரிஸ் டான் திட்டத்தில் பயணித்த அண்ணா மேனன், ககன்யான் திட்டத்தில் பணியாற்றிய ஏர் கமாண்டர் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் மற்றும் தனது முதல் விண்வெளி பயணத்தை தொடங்கவிருக்கும் டாக்டர் அனில் மேனன் ஆகிய மூன்று பேர் கேரள நாட்டிற்கு பெருமை தேடி தந்துள்ளனர்.

அனில் மேனன் விண்வெளி வீரர் ஆவதற்கு முன்பு, போலியோ தடுப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் ரோட்டரி தூதராகவும், பிற்காலத்தில் மருத்துவராகவும் பணியாற்றியதாக நாசா தெரிவித்துள்ளது.

அனில் மேனன் குறித்து நாசா மேலும் கூறுகையில், “அவர் ஒரு மருத்துவர், இயந்திர பொறியாளர், விண்வெளி மருத்துவ நிபுணர், விமான அறுவை சிகிச்சை நிபுணர், ராணுவ அதிகாரி, விமானி மற்றும் ஆராய்ச்சியாளர்” என குறிப்பிட்டுள்ளது.

ஜூலை 14 அன்று, கஜகஸ்தானில் உள்ள பைக்கோனூர் விண்வெளி ஏவுதளத்திலிருந்து, ரஷிய விண்வெளி வீரர்களுடன் இணைந்து எம்எஸ்-29 விண்கலத்தில் அனில் மேனன் செல்ல உள்ளார்.

இந்த குழுவினர் அங்கு சுமார் எட்டு மாதங்கள் அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, அதன்பின்னர் 2027-இல் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com