

மாநில அரசுகள் தங்களுடைய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவும், கட்டமைப்புகளை மேம்படுத்தவும் கடன் வாங்குகின்றனர். இதில் அளவுக்கு மீறி வாக்குறுதிகள் அளித்து, அதை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுவதால் அதற்கு அதிக அளவில் நிதி தேவைப்படுகிறது.
இந்த நிதிகளை அதிக அளவில் கடன் மூலம் பெறுகின்றனர். ஆனால் மாநில அரசுகளால் வாங்கப்படும் கடனுக்கும் ஒரு வரைமுறை உள்ளது. அதாவது அந்த மாநிலம் தன்னுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 3.5 சதவீதம் வரை நிதி பற்றாக்குறையுடன் செயல்பட முடியும்.
கேரளம் மாநிலத்தில் கடந்த பினராயி விஜயன் தலைமையிலான அரசு, இந்த சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது. இதற்கு அப்போதைய காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது வி.டி. சதீசன் முதல்வராக இருந்து வருகிறார்.
இவர் கேரள மாநில எம்.பி.க்கள் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, வருகின்றன மழைக்கால கூட்டத்தின்போது, மாநில அரசுக்கான நிதி பற்றாக்குறையை 3.5 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதமாக அதிகரிக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. வி சிவதாசம், காங்கிரஸ் தலைமையிலான அரசின் இரட்டை நிலைப்பாடு வெளிப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக வி. சிவதாசன் கூறியதாவது:-
அவர்கள் (காங்கிரஸ் கூட்டணி) எதிர்க்கட்சியாக இருந்த போது, நிதிநிலை குறித்து நாங்கள் பேசும்போது, அவர்கள் குறை கூறினார்களே தவிர கேரள மாநிலத்திற்கு வரவேண்டிய நிதிக்காக மத்திய அரசுக்கு எதிரான நம்முடைய முயற்சியை ஒருபோதும் ஆதரிக்கவில்லை.
தற்போது, அவர்கள் அதிகாரத்திற்கு வந்த பிறகு, கடன் வரம்பை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை உயர்த்துகிறார்கள். கேரளா மற்றும் அம்மாநில மக்களின் நலனுக்காக நாடாளுமன்றத்தில் ஒற்றுமையுடன் செயல்படுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களை கேட்டுக்கொள்வதற்குப் பதிலாக, அரசியல் பிரச்சாரத்திற்காகவே அரசு இந்த கூட்டத்தைக் கூட்டியிருந்தது.
இவ்வாறு சிவதாசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.