

திமுகவின் கருப்புக்கொடி போராட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பேசிய கருத்துக்கு கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம், திமுக எம்.பி டி.ஆர்.பாலு தமிழ்நாட்டின் முதலமைச்சர் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தியிருக்கிறார் என கூறியபோது, அதை எல்லாம் ஏன் இங்கு கூறுகிறீர்கள் என்றும், முதல்வர் கருப்புக்கொடி ஏற்றினால் என்ன? நீலக்கொடி ஏற்றினால் என்ன? என்று சபாநாயகர் கிண்டலாக தெரிவித்தார்.
சபாநாயகரின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக எம்பி கனிமொழி இன்று நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார்.
அப்போது அவர் கூறுகையில்,"கருப்புக்கொடி என்பது போராட்டத்தின் அடையாளம். கருப்பு என்பது நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து போராடி வெற்றி பெருவோம் என்பதை உரக்க சொல்வதற்கான குறியீடு.
நீலக்கொடி என்பது அம்பேத்கர் அவர்களின் குறியீடு. ஆனால் அதே நீல நிறத்தைதான் நீங்கள் நேற்று கேவலப்படுத்தினீர்கள். அதே அம்பேத்கர்தான் எங்களுக்கு கற்பி, ஒன்றுசேர்,போராடு என சொல்லிக்கொடுத்தவர்" என்றார்.