ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பலில் கடற்படை மாலுமி மர்ம மரணம்

கப்பலில் பீகார் மாநிலம் முசாபர்பூரை சேர்ந்த சுசாந்த்குமார் என்பவர் கடற்படை மாலுமியாக இருந்தார். சுசாந்த்குமார் தற்கொலை குறித்து எர்ணாகுளம் டவுன் போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்கு பதிந்துள்ளனர்.
ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பலில் கடற்படை மாலுமி மர்ம மரணம்
Published on

திருவனந்தபுரம்:

இந்திய கப்பற்கடைக்கு சொந்தமான விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த் கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பலில் பீகார் மாநிலம் முசாபர்பூரை சேர்ந்த சுசாந்த்குமார்(வயது19) என்பவர் கடற்படை மாலுமியாக இருந்தார். இந்நிலையில் அவர் அங்கு தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதுகுறித்து தகவலறிந்த கடற்படை அதிகாரிகள் அங்கு சென்று பார்த்தனர். சுசாந்த்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார் என்று கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது தெரியவில்லை.

இது தொடர்பாக கடற்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சுசாந்த்குமார் தற்கொலை குறித்து எர்ணாகுளம் டவுன் போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்கு பதிந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com