வெப்ப அலையிலிருந்து விடுபடும் வட இந்தியா.. 2,500 கி.மீக்கு திரண்ட மேகக் கூட்டம் - விரைவில் மழை!

மத்திய இந்தியப் பகுதிகளில் இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வெப்ப அலையிலிருந்து விடுபடும் வட இந்தியா..  2,500 கி.மீக்கு திரண்ட மேகக் கூட்டம் - விரைவில் மழை!
Published on

வட இந்திய மாநிலங்களை கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் அங்கு மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வானிலை கண்காணிப்பு செயற்கைகோள் INSAT-3DS, எடுத்து அனுப்பியுள்ள படங்களில் வட மற்றும் மத்திய இந்தியா பகுதியில் பிரம்மாண்ட மேகக்கூட்டங்கள் திரண்டு வருவது பதிவாகி உள்ளது.

பாகிஸ்தான் மற்றும் வடமேற்கு இந்தியாவிலிருந்து தொடங்கி பஞ்சாப், அரியானா, டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் மத்திய இந்தியப் பகுதிகள் வழியாக வங்காள விரிகுடா வரை சுமார் 2,000 முதல் 2,500 கிலோமீட்டர் நீளத்திற்கு இந்த அடர்ந்த மேகக்கூட்டம் திரண்டு காணப்படுகிறது.

தீவிர வெப்ப அலைக்கு பிறகு வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தால் அரியானா, டெல்லி, ராஜஸ்தான் மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளில் இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் ஜம்மு காஷ்மீர் போன்ற மலைப் பிரதேசங்களில் மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும்.

X

Maalai Malar
www.maalaimalar.com