Trump | அமெரிக்காவின் அடிமை நாடு போல இந்தியா செயல்படுகிறது - பினராயி விஜயன் விமர்சனம்!

ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்க டிரம்ப் அனுமதிப்பதும், அதை மோடி அரசு பணிவுடன் ஏற்றுக்கொள்வதும் இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் பினராயி விஜயன் தெரிவித்தார்.
pinarayi vijayan
pinarayi vijayan
Published on

கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய அரசின் வெளிநாட்டு கொள்கையை கடுமையாக விமர்சித்து, இந்தியா அமெரிக்காவின் அடிமை நாடு போல செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ANIக்கு அவர் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

மத்திய அரசு உலக ஏகாதிபத்திய நாடுகளுக்கு எதிராக தன்னிச்சையான நிலைப்பாடு எடுக்கத் தவறிவிட்டது. குறிப்பாக, அமெரிக்காவின் கொள்கைகளுக்கு இந்தியா அதிகமாக சார்ந்திருப்பது கவலைக்குரியது.

பாஜக, காங்கிரஸ் இரண்டும் வெளிநாட்டு கொள்கையில் உலக ஏகாதிபத்திய நாடுகளை சார்ந்த அணுகுமுறையைப் பின்பற்றுகின்றன.

இந்தியா தனது பாரம்பரிய ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலைப்பாட்டைத் துறந்துவிட்டு, அமெரிக்காவின் அடிமை நாடு போலச் செயல்படுகிறது.

ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்க டிரம்ப் அனுமதிப்பதும், அதை மோடி அரசு பணிவுடன் ஏற்றுக்கொள்வதும் இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் ஆகும். மேலும், இஸ்ரேல் உடனான நெருக்கம் பாஜக ஆட்சியில் உச்சம் தொட்டுள்ளது.

இந்தியா தனது சுயாட்சி மற்றும் வெளிநாட்டு கொள்கையில் தன்னிச்சையான நிலைப்பாட்டை மீண்டும் நிலைநிறுத்த வேண்டும்

என்று தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com