Kerala Election 2026 | காங்கிரஸ், ராகுல் காந்தி பா.ஜ.க.-வின் 'B Team': பினராயி விஜயன் கடும் தாக்கு

காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைவர் ராகுல் காந்தி பாஜக-வின் B Team என்று கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் கடுமையாக விமர்சித்துள்ளார்
ராகுல் காந்தி- பினராயி விஜயன்
ராகுல் காந்தி- பினராயி விஜயன்
Published on

கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சிலர், எதையாவது நேரில் கண்டாலோ அல்லது நேரடியாக அனுபவித்தாலோ கூட அதிலிருந்து எதையும் கற்றுக்கொள்வதில்லை. அவர்கள் சாதாரணமான மனிதர்கள் அல்ல. அவர்கள் ஒரு அபூர்வமான வகையினர். இயல்பாகவே எதையும் கிரகித்துக் கொள்ளும் திறன் அற்றவர்களுக்குத்தான் இத்தகைய நிலை ஏற்படுகிறது. ராகுல் காந்தி அத்தகைய வகையைச் சேர்ந்தவர்.

டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பயங்கரமான வகையில் குற்றச்சாட்டை முன் வைத்தார். ஆனால், நீதிமன்றம் அவரை குற்றமற்றவர் என்று விடுவித்துள்ளது.

ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைமையின் முகத்தில் விழுந்த ஒரு பலத்த அடியாக அது அமைந்தது. அப்படியிருந்தும், அவர் அதே விஷயத்தையே மீண்டும் மீண்டும் செய்வது மிகவும் வருந்தத்தக்கது. அதனால்தான், தாங்கள் கண்டவற்றிலிருந்தும் அனுபவித்தவற்றிலிருந்தும் அவர்கள் பாடம் கற்றுக்கொள்வதில்லை என்று நான் கூறினேன்.

தேசிய அளவிலான விவகாரங்களை நாம் உற்று நோக்கினால், ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியானது பா.ஜ.க-வின் உண்மையான B-team ஆக மாறிவிட்டதையே காண முடிகிறது. எனினும், அதன் விவரங்களுக்குள் நான் இப்போது செல்லப்போவதில்லை.

காங்கிரஸ் மற்றும் UDF, பாஜக-வுடன் கூட்டணி அமைப்பதில் எவ்விதத் தயக்கமும் இல்லாத ஒரு பிரிவாக மாறிவிட்டன.

இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com