வருங்கால போர்கள் AI மூலம் நடத்தப்பட்டாலும், வீரர்கள் சக்தியுடன் மட்டுமே வெற்றி பெற முடியும்: ராஜ்நாத் சிங்

ஆந்திரப் பிரதேசம் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் விண்வெளி உற்பத்தி துறையில் ஒரு புதிய வல்லமைமிக்க மையமாக உருவெடுத்துள்ளது.
Rajnath Singh says trained soldiers and strong military power will decide victory
Published on

வருங்காலத்தில் நடைபெறும் போர்கள் செயற்கை நுண்ணறிவு கொண்டு நடத்தப்பட்டாலும், பயிற்சி பெற்ற வீரர்கள் மற்றும் வலுவான ராணுவ சக்தியின் உறுதியால் மட்டுமே வெற்றி பெற முடியும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

ஐஎன்எஸ் மகேந்திரகிரி:

விசாகபட்டினத்தில் ஐஎன்எஸ் மகேந்திரகிரி போர் கப்பல் தொடக்க விழாவில் பேசிய ராஜ்நாத் சிங், ஆந்திரப் பிரதேசம் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் விண்வெளி உற்பத்தி துறையில் ஒரு புதிய வல்லமைமிக்க மையமாக உருவெடுத்துள்ளது என்று கூறினார்.

இதுகுறித்து மேலும் கூறிய அவர், “எதிர்கால போர்கள் செயற்கை நுண்ணறிவை கொண்டு நடத்தப்பட்டாலும், பயிற்சி பெற்ற வீரர்கள், திறமையான ராணுவ சக்தி மற்றும் தேசத்தின் உறுதிப்பாடு ஆகியவற்றின் மூலம்தான் வெற்றி உறுதிபடுத்தப்படும்.

எனவே, புதிய தொழில்நுட்பங்களும் மரபுவழி தளங்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல, மாறாக அவை ஒன்றுக்கொன்று துணைபுரிந்து முழுமையாக்குகின்றன.

மரபுவழி தளங்கள் இல்லாமல், புதிய தொழில்நுட்பங்கள் முழுமையற்றவையாக கருதப்படும். ஐஎன்எஸ் மகேந்திரகிரி என்பது ‘ப்ராஜெக்ட் 17ஏ’ நீலகிரி வகை மறைமுக தாக்குதல் திட்டத்தின் ஒரு பகுதி ஆகும்.

ஐஎன்எஸ் மகேந்திரகிரி, ப்ராஜெக்ட் 17ஏ திட்டத்தின் ஆறாவது போர்க்கப்பல் மற்றும், எம்.டி.எல் நிறுவனத்தால் கட்டப்பட்ட நான்காவது போர்க்கப்பல் ஆகும்.

இது சுமார் 6,670 டன் எடையுடன், மணிக்கு 28 நாட்டிக்கல் மைல் வேகம் வரை செல்லக்கூடியது.

மேலும் ஒரு பல்நோக்கு மறைமுக போர்க்கப்பலாக வான்வழி அச்சுறுத்தல்கள் மற்றும் எதிரி நாட்டின் மேற்பரப்பு மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை ஒரே நேரத்தில் எதிர்கொள்ளும் திறன் கொண்டது” என்று அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com