Fire Accident | டெல்லியில் கட்டிடத்தில் தீ விபத்து- 6 பேர் உயிரிழப்பு

டெல்லியில் பாலன் என்ற பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
Fire Accident | டெல்லியில் கட்டிடத்தில் தீ விபத்து- 6 பேர் உயிரிழப்பு
Published on

டெல்லியில் பாலன் என்ற பகுதியில் உள்ள கட்டிடத்தில் இன்று காலை 7 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 6 பேர் மூச்சுத்திணறல் மற்றும் தீக்காயங்களால் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். கட்டிடத்திற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், முழுமையான விசாரணைக்குப் பிறகே அதிகாரப்பூர்வ காரணம் தெரியவரும்.

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்லி காவல்துறை இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com