வீட்டுக்குள் பிரார்த்தனை நடத்த கூட அனுமதி வாங்க வேண்டுமா? - காவல்துறையை விளாசிய உயர்நீதிமன்றம்

மனுதாரர்களின் குடிமை உரிமைகளில் தலையிட வேண்டாம் என்றும், விசாரணை என்ற போர்வையில் அவர்களைத் துன்புறுத்த வேண்டாம்
வீட்டுக்குள் பிரார்த்தனை நடத்த 
கூட அனுமதி வாங்க வேண்டுமா? - காவல்துறையை விளாசிய உயர்நீதிமன்றம்
Published on

வீடுகளில் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்துவதை எந்தச் சட்டமும் தடை செய்யவில்லை என்று சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஜாங்கீர் சம்பா பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் கிறிஸ்தவ பிரார்த்தனைகளை நடத்துவதைத் தவிர்க்குமாறு காவல்துறை விடுத்த அறிவிப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது பேசிய நீதிபதி நரேஷ் குமார் சந்திரவன்ஷி, "ஒருவர் வசிக்கும் வீட்டில் பிரார்த்தனை நடத்துவதைத் தடைசெய்யும் சட்டம் எதுவும் இல்லை.

மேலும், சட்டத்தை மீறாமல் நடத்தப்படும் பிரார்த்தனைகள் அல்லது பிரார்த்தனைக் கூட்டங்களுக்கு எந்தவொரு அதிகாரியிடமிருந்தும் முன் அனுமதி பெற வேண்டிய அவசியமும் இல்லை" என்று குறிப்பிட்டார்.

அங்கு ஏதேனும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட்டால், உரிய சட்டங்களின் கீழ் அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

எனவே, மனுதாரர்களின் குடிமை உரிமைகளில் தலையிட வேண்டாம் என்றும், விசாரணை என்ற போர்வையில் அவர்களைத் துன்புறுத்த வேண்டாம் என்றும் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com