ஆகஸ்டு முதல் பெண்களுக்கு மாதம் ரூ.2,500- டெல்லி அரசு முடிவு

பாஜக சார்பில் மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மகளிர் உரிமைத் தொகை செயல்படுத்தி வருகிறது.
Delhi Government CM Rekha gupta
Published on

டெல்லியில் பா.ஜ.க அரசு பதவியேற்று ஒரு ஆண்டு ஆகிறது. தேர்தலின்போது, தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என எதிர்க்கட்சிகள் பா.ஜ.க தெரிவித்து இருந்தது.

இந்த திட்டத்தை டெல்லி அரசு ஏன் இன்னும் தொடங்கவில்லை? என கேள்விகள் எழுந்தன. எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி இந்த கேள்வியை பொதுமக்களிடம் முன்வைத்தது.

இந்தநிலையில் பெண்களுக்கான உதவித்தொகை திட்டம், ரக்சா பந்தன் தினத்தையொட்டி வருகிற ஆகஸ்டு மாதம் 28-ந் தேதி தொடங்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

டெல்லி சட்டமன்ற தேர்தல்

டெல்லி சட்டமன்றத் தேர்தல் கடந்த ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி நடைபெற்றது. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது.

அப்போது, மக்களின் வாக்குகளை கவரும் வகையில், கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளை 3 கட்சிகளும் அறிவித்தன. இதில், ஒன்று தான் மகளிருக்கான உரிமைத் தொகை.

இந்த தேர்தலில் பாஜக வென்று ஆட்சியை பிடித்தது. முதலமைச்சராக ரேகா குப்தா பதவி ஏற்றார்.

முதன்மை மாநிலம்

தமிழ்நாட்டில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகளில் மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

பிற மாநிலங்கள்

திமுகவை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி கர்நாடகா, தெலங்கானாவில் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பாஜக தரப்பில் மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மாநிலங்களில் மகளிர் உரிமைத் தொகை செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில், தற்போது டெல்லியிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

ஆனால், தமிழ்நாட்டை விட மற்ற மாநிலங்களில் மாதந்தோறும் வழங்கும் தொகை இரண்டு மடங்கு அதிகமாகும்.

தமிழகத்திலும் உயர்வு

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றார். தவெக சார்பில் விஜய் அறிவித்த வாக்குறுதிகளில் மகளிருக்கு உரிமைத் தொகையாக ரூ.2500 வழங்கப்படும என அறிவித்தார்.

ஆனால், தமிழகத்தில் நிலவும் நிதி நெருக்கடி காரணமாக தற்போதைக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. விரைவில், ரூ.2500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com