மத்திய அரசின் அனைத்துக் கட்சிக் கூட்டம் நிறைவு!

அதிருப்தி திரிணாமுல் எம்.பி.க்களுக்கு தனி இருக்கை ஒதுக்கியதாகக் கூறி, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
மத்திய அரசின் அனைத்துக் கட்சிக் கூட்டம் நிறைவு!
Published on

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு டெல்லியில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம், நிறைவடைந்தது.

நாளை (ஜூலை. 20) நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், அவையைச் சுமுகமாக நடத்துவது குறித்து விவாதிக்க மத்திய அரசு இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது

நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் கிரண் ரிஜிஜுவால், நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்தில் கூட்டப்பட்ட இந்த கூட்டத்தின் ஆலோசனைகளுக்கு இடையே எதிர்க்கட்சிகள் வெளிநடப்பும் செய்தன.

அதிருப்தி திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.களுக்கு தனி இருக்கை ஒதுக்கியதாக குற்றம்சாட்டி, காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, திமுக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ஆம் ஆத்மி கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி, இடதுசாரிக் கட்சிகள் மற்றும் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா உள்ளிட்டக் கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

பின்னர் மீண்டும் வந்து கூட்டத்தில் கலந்துகொண்டன. இக்கூட்டத்தில் அரசின் சார்பில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா, நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நாளை தொடங்கவுள்ள கூட்டத்தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா போன்றவற்றை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேநேரம் நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com