எத்தனால் பெட்ரோல் தொடர்பாக நிதின் கட்கரியை விமர்சித்த 4 சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்கள் மீது வழக்குப் பதிவு!

எத்தனால் பெட்ரோலுக்கு எதிரான வாதம் பணம் கொடுத்து நடத்தப்படும் பிரச்சாரம் என நிதின் கட்கரி கூறியுள்ளார்.
எத்தனால் பெட்ரோல் தொடர்பாக நிதின் கட்கரியை விமர்சித்த 4 இன்ஃப்ளூயன்சர்கள் மீது வழக்குப் பதிவு!
Published on

எத்தனால் கலந்த பெட்ரோல் குறித்த விவாதம் இந்தியாவில் சூடிபிடித்துள்ள நிலையில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரியை உள்ளடக்கி, எத்தனால் பெட்ரோல் தொடர்பாக தவறாக வீடியோ வெளியிட்டதாக, பீகாரைச் சேர்ந்த பிரபல யூடியூபர் மனிஷ் காஷ்யப் உட்பட 4 சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்கள் மீது நாக்பூர் சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பாஜகவின் சமூக ஊடகப் பிரிவின் நாக்பூர் நகரத் தலைவர் ஷிஷிர் திரிபாதி அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்தப் புகாரில் எத்தனால் பெட்ரோல் தொடர்பாக தவறான தகவல்களை பரப்புவதாகவும், நிதின் கட்கரியின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதை நோக்கமாக கொண்டு இவ்வாறு செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தவறான தகவல்களைப் பரப்புதல், பொது அமைதியைக் குலைத்தல் மற்றும் மத்திய அமைச்சருக்கு அவதூறு ஏற்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் மனிஷ் காஷ்யப், தேசி பாய்ஸ், ஹிர்ஷித் ரதி, அங்க்லேஷ் இன்வாதி ஆகியோர் செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com