பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ்- கர்நாடக அரசு கடிதம்

மத்திய அரசுக்கு கர்நாடக மாநில அரசு இ- மெயில் வாயிலாக கடிதம் எழுதியுள்ளது.தேடப்படும் நபராக அறிவித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸ்.
பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ்- கர்நாடக அரசு கடிதம்
Published on

கர்நாடகத்தில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் ஹாசன் தொகுதியில்பா.ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிட்டார்.

தேர்தல் முடிந்ததும் அவர் ஜெர்மனி சென்றுவிட்டார். அவரை கைது செய்ய சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அவரை தேடப்படும் நபராக அறிவித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் அறிவிப்பை வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு கர்நாடக மாநில அரசு இ- மெயில் வாயிலாக கடிதம் எழுதியுள்ளது.

மேலும் அதில், குற்றவாளி குறித்த தகவல்களை அனைத்து நாடுகளுக்கும் தெரிவிக்கும் வகையில், ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட வலியுறுத்தப்பட்டுள்ளது.

முன்ஜாமின் கோரி பிரஜ்வல் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை, கர்நாடகாவில் மக்கள் பிரதிநிதித்துவ நீதிமன்றத்தில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com