பா.ஜ.க. எம்.பி. பிரக்யா சிங்குக்கு கொரோனா

போபால் தொகுதி பா.ஜ.க. எம்.பி. பிரக்யா சிங் தாக்கூருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கவனமாக இருக்கும்படி கூறியுள்ளார்.
பிரக்யா சிங் தாக்கூர்
பிரக்யா சிங் தாக்கூர்
Published on

போபால் :

மத்தியபிரதேச மாநிலம் போபால் தொகுதி பா.ஜ.க. எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர். அவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது.

அதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பிரக்யா சிங் வெளியிட்ட தகவலில், ‘எனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் மருத்துவ கண்காணிப்பில் உள்ளேன்.

கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கவனமாக இருக்கும்படியும், தேவைப்பட்டால் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படியும் கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com