வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்காதது ஏன்? ராகுல், பிரியங்கா காந்தி மீது பாஜக குற்றச்சாட்டு

கனமழை காரணமாக கேரளம் மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமானோர் உயிரிழ்ந்தனர்.
பிரியங்கா காந்தி- ராகுல் காந்தி
பிரியங்கா காந்தி- ராகுல் காந்தி
Published on

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் அதிகனமழையும் பெய்தது. கடந்த 7-ந்தேதி வயநாட்டில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்ட்டது. இதில் ஏராளமானோர் சிக்கி உயிரிழந்தனர்.

வயநாடு பிரியங்கா காந்தி தொகுதியாகும். நிலச்சரிவு ஏற்பட்ட வயநாட்டில் மக்களை சந்திக்காதது ஏன்? என்று ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. அவர்களின் உணர்வின்றிய மற்றும் அலட்சியமான போக்குக்கு காந்தி குடும்பத்தினர் தெளிவான மற்றும் உறுதியான மன்னிப்பு கோர வேண்டும் என்று பாஜக தெரிவித்துள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியிடம் இருந்து உடனடி பதில் ஏதும் இல்லை.

மேலும், ராகுல் காந்தி மர்மம் சூழ்ந்ததாகக் கருதப்படும் தனது சமீபத்திய வெளிநாட்டு பயணம் குறித்த விவரங்களை வெளியிடுமாறும், அவரது வெளிநாட்டு நிகழ்வுகள் ஏதேனும் இந்தியாவின் அரசியல் அல்லது மூலோபாய நலன்களுடன் தொடர்புடையவையா என்பதைத் தெரிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு என்றும் பாஜக வலியுறுத்தியுள்ளது.

சுதான்ஷு திவேதி
சுதான்ஷு திவேதி

இது தொடர்பாக பாஜக தேசிய செய்தி தொடர்பாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சுதான்ஷு திவேதி கூறியதாவது:-

ராகுல் காந்தி களத்தில் இல்லை. அவர் தனது தொகுதியை விட்டுவிட்டு, அந்தப் பொறுப்பைத் தனது சகோதரி பிரியங்கா காந்தியிடம் ஒப்படைத்தபோது, ​​"இனி வயநாட்டிற்கு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பார்கள்" என்று வெளிப்படையாகக் கூறினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, காந்தி குடும்பத்தைச் சேர்ந்த அந்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்களுமே களத்தில் எங்கும் காணப்படவில்லை. இது வயநாடு மற்றும் கேரள மக்களுக்கே இழைக்கப்படும் துரோகமாகும்.

சில சமயங்களில், தங்கள் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தலைமறைவாக இருப்பதாக மக்கள் கருதுவதுண்டு. ஆனால் இங்கே நிலைமை இன்னும் விசித்திரமானது: ஒரு நாடாளுமன்ற உறுப்பினரே நாட்டை விட்டே தலைமறைவாகிவிட்டார்.

ஜெயராம் ரமேஷ் ஆழ்ந்த அறிவுடையவராக இருந்தபோதிலும், வயநாடு மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியையும் ராகுல் காந்தியின் தவறான செயலையும் அவரது அறிவுத்திறனாலும் ஞானத்தாலும் ஈடுசெய்ய முடியாது. ஜெயராம் ரமேஷ் என்னதான் செய்தாலும், அது ஒரு மிகப்பெரிய தோல்வியை மறைப்பதற்கான வெறும் தற்காலிக முயற்சியாகவே அமையும்.

இவ்வாறு சுதான்ஷு திவேதி தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com