பாலியல் வழக்கில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு பிடிவாரண்ட்

சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.சிறப்பு புலனாய்வு குழுவின் கோரிக்கையை ஏற்று பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாலியல் வழக்கில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு பிடிவாரண்ட்
Published on

கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச படம் வெளியான விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறி உள்ளது. இந்த வழக்கில் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள பிரஜ்வலை கைது செய்ய சர்வதேச அளவில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பிரஜ்வல் ஆபாச வீடியோவை வெளியிட்டது தொடர்பாக அவரது முன்னாள் கார் டிரைவர் கார்த்திக் பா.ஜ.க. பிரமுகர் வக்கீல் தேவராஜ கவுடா ஆகியோர் மீது சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் பாலியல் புகார் தொடர்பான வழக்கில் தேவராஜ கவுடா கைது செய்யப்பட்டார். இதற்கிடையே ஆபாச படங்கள் வெளியான இணையதளங்கள் குறித்த பட்டியலை சேகரித்து அவற்றை நீக்க சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் இந்த ஆபாச படங்கள் இருந்தால் அழிக்கவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்து இருந்தனர்.

தொடர்ந்து தலைமறைவாக உள்ள பிரஜ்வல் கர்நாடகாவில் யார், யாருடன் தொடர்பில் இருந்து வருகிறார் என்றும் சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில்,பாலியல் வழக்கில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து பெங்களூரு செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறப்பு புலனாய்வு குழுவின் கோரிக்கையை ஏற்று பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஐந்து முறைக்கு மேல் சம்மன் அனுப்பியும் ஆஜர் ஆகாத நிலையில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஏற்கனவே ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com