கனமழை எதிரொலி - இமாச்சல பிரதேசத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

கனமழை எதிரொலியால் இமாச்சல பிரதேசத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.இமாச்சல பிரதேச பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த முதுகலை மற்றும் பி.எட். தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது.
கனமழை எதிரொலி -  இமாச்சல பிரதேசத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
Published on

சிம்லா:

வடகிழக்குப் பருவமழை காரணமாக இமாச்சல பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில், மேக வெடிப்பு எனும் வகையில் குறிப்பிட்ட பகுதியில் அளவுக்கு மிஞ்சிய மழை பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் கனமழை காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தில் கனமழை காரணமாக ஆகஸ்ட் 14-ம் தேதி (நாளை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மேலும், இமாச்சல பிரதேச பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த முதுகலை, பி.எட். தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com