கடவுளுக்கு நன்றி: கட்டிட இடிபாடுகளில் இருந்து 30 மணி நேரத்துக்கு பிறகு மீட்கப்பட்ட குடும்பத்தினர் உருக்கம்

கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடவுளுக்கு நன்றி: கட்டிட இடிபாடுகளில் இருந்து 30 மணி நேரத்துக்கு பிறகு மீட்கப்பட்ட குடும்பத்தினர் உருக்கம்
Published on

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியின் புராரி பகுதியில் உள்ள 4 மாடி கட்டிடம் ஒன்று நேற்று முன்தினம் மாலை இடிந்து விழுந்து விபத்தில் சிக்கியது. இந்த இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருப்பதாக போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் இடிபாட்டிற்குள் சிக்கியிருப்பவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, இடிபாடுகளில் சிக்கிய 2 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. மேலும் இந்த இடிபாட்டில் இருந்து 12 பேர் மீட்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 10-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லி கட்டிட விபத்தில் இருந்து 30 மணி நேரத்துக்குப் பிறகு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், எங்களை காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com