ஜம்மு காஷ்மீரில் நள்ளிரவில் லேசான நில அதிர்வு

நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் நள்ளிரவில் லேசான நில அதிர்வு
Published on

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் இன்று (திங்கள்கிழமை) லேசான அதிகாலை நிலஅதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டரில் 3.6 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS) தெரிவித்துள்ளது.

தேசிய நிலநடுக்கவியல் மையம் 'எக்ஸ்' (X) தளத்தில் பகிர்ந்துள்ள தகவலின்படி, இந்த நிலநடுக்கம் அதிகாலை 2 மணியளவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.

இச்செய்தி வெளியாகும் வரை, இதனால் எந்தவித சேதமோ அல்லது உயிரிழப்போ ஏற்பட்டதாகத் தகவல் ஏதுமில்லை.

கடந்த பிப்ரவரி மாதமும் இம்மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது; அப்போது ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவான நிலநடுக்கம் இப்பகுதியை உலுக்கியது. அந்த சமயத்தில் பட்டான் (Pattan) பகுதி நிலநடுக்கத்தின் மையப்புள்ளியாக இருந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com