அரியானா தேர்தல் களத்தில் 1,031 வேட்பாளர்கள்

வேட்பாளர்களின் 1,221 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன.190 பேர் தங்களின் மனுக்களை திரும்ப பெற்றனர்.
அரியானா தேர்தல் களத்தில் 1,031 வேட்பாளர்கள்
Published on

சண்டிகார்:

பா.ஜ.க. ஆளும் அரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இத்தேர்தலில் போட்டியிட பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஜனநாயக ஜனதா கட்சி, இந்திய தேசிய லோக் தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் உள்பட மொத்தம் 1,559 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவை பரீசிலிக்கப்பட்டு 1,221 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன.

வேட்பு மனுக்களை திரும்பப் பெற நேற்று (திங்கட்கிழமை) கடைசி நாள் என்ற நிலையில், 190 பேர் தங்களின் மனுக்களை திரும்பப் பெற்றனர்.

இதையடுத்து, 1,031 வேட்பாளர்களுடன் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. அடுத்த மாதம் 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com