தமிழகம், புதுச்சேரி மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்: நாராயணசாமி

தமிழகம், புதுச்சேரி மாணவர்களுக்கு இந்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி கூறினார்.
தமிழகம், புதுச்சேரி மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்: நாராயணசாமி
Published on

மதுரை:

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

மாட்டுக்கறிக்கு தடை செய்த மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். அதே போல் தமிழக சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

நீட் தேர்வினால் தமிழகம், புதுச்சேரி மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே இந்த வருடம் மத்திய அரசு தமிழகம், புதுச்சேரி மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெறுவார்? என்பதை கணக்கிட்டு கூற முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com