

சென்னை:
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இடைத்தேர்தல் வரும் 21-ம் தேதி நடைபெறுகிறது.
விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முத்தமிழ்ச்செல்வன், தி.மு.க. வேட்பாளராக புகழேந்தி ஆகியோர் போட்டியிடுகிறார்கள். நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக நாராயணன், தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரன் ஆகியோர் நிற்கிறார்கள். நாம் தமிழர் உள்பட பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் களம் இறங்கி உள்ளனர்.
இந்நிலையில், விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 12-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை பிரசாரம் மேற்கொள்கிறார் என அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.