தமிழகத்தில் மேலும் 89 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னையில் மேலும் 30 பேருக்கும், செங்கல்பட்டில் மேலும் 42 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
கொரோனா தொற்று
கொரோனா தொற்று
Published on

தமிழகத்தில் மேலும் 89 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நேற்று 58 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் இன்று 89-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மட்டும் புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் மேலும் 30 பேருக்கும், செங்கல்பட்டில் மேலும் 42 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

கொரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. இதுவரை மொத்தம் 38,025 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 466-ல் இருந்து 499-ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் 64 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com