என் மலர்
உள்ளூர் செய்திகள்

2 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண உதவி- கே.பி. கந்தன் வழங்கினார்
- கே.பி.கே. சதீஷ்குமார் ஏற்பாட்டில் சென்னை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கே.பி. கந்தன் வழங்கினார்.
- பகுதி கழக பொருளாளர் கே.குமார் மற்றும் கழக நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சென்னை:
அ.தி.மு.க. பொது செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க சென்னை புறநகர் மாவட்டம் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி, பெருநகர சென்னை மாநகராட்சி 182 - வது வார்டு கந்தன்சாவடிக்குட்பட்ட அம்பேத்கர் சாலை, வீரமணி சாலை, திரு.வி.க. தெரு, ஜீவானந்தம் தெரு மற்றும் பால்ராஜ் நகர் ஆகிய பகுதியில் மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட சுமார் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. அரிசி, போர்வை, பருப்பு, ரவை, கோதுமை, சமையல் எண்ணெய், சேமியா, பிஸ்கட், மிளகாய் தூள், சர்க்கரை, தண்ணீர் பாட்டில் ஆகிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு பையை மாவட்ட எம். ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளரும் 182 - வது வார்டு மாமன்ற உறுப்பினரும் மாநகராட்சி கழக குழு தலைவருமான கே.பி.கே. சதீஷ்குமார் ஏற்பாட்டில் சென்னை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கே.பி. கந்தன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் எம். ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளரும் 193- வது வார்டு மாமன்ற உறுப்பினருமான டி.சி. கோவிந்தசாமி, பகுதி செயலாளர் ஜி.எம். ஜானகிராமன், வட்ட செயலாளர் பி. ராஜேந்திரன், எம். வெங்கடேசன், பி.எல். செந்தில்வேல், பகுதி மகளிர் மகளிர் அணி செயலாளர் அமுதா வெங்கடேசன், பகுதி கழக பொருளாளர் கே.குமார் மற்றும் கழக நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






