

ஈரான் போர் ஓய்ந்து ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டு மத்திய கிழக்கில் இருந்து கச்சா எண்ணெய் வரத்து அதிகரித்த ஒரு சில நாட்களில் மீண்டும் போர் மூண்டுள்ளதால் சர்வதேச கச்சா எண்ணெய் விலைகளில் மீண்டும் தாக்கம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
இதனால் மக்கள் அன்றாடம் வாகனங்களுக்கு பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகின்றன.
கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.
அந்த வகையில் இன்று (10.07.2026 - வெள்ளிக்கிழமை)க்கான பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.
இதன்படி இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
இதற்கு ஏற்றவாறு வாகன ஓட்டிகள் திட்டமிட்டு பயணிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இன்று சர்வதேச சந்தையில் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 75.22 டாலர் என விற்பனை ஆகி வருகிறது.
வரும் நாட்களில் போர் மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுவதால் விலை மேலும் உயரக்கூடும். இதனால் வாகன ஓட்டிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
மத்திய அரசு உலக சந்தை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.