

நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் இயங்குகின்றன. இங்கே சுமார் 4 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இதன்மூலம், ஒரு நாளுக்கு கிட்டத்தட்ட 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதன் கொள்முதல் விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுதான் நிர்ணயம் செய்யும்.
குறிப்பாக, கோழி தீவின மூலப்பொருளின் விலை , வெளிநாடு ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை விலை நிர்ணயிக்கப்படுகிறது.
அதன்படி, மேற்காசிய போரால் கோழி தீவின மூலப்பொருளின் விலை உயர்ந்துள்ளது. இதனால், முட்டையின் பண்ணை கொள்முதல் விலை தொடர்ந்து உயர்ந்துக்கொண்டே வருகிறது.
இந்நிலையில், இன்று நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் கொள்முதல் விலை வரலாறு காணாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
அதன்படி, நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் கொள்முதல் விலை ஒரே நாளில் காசுகள் அதிகரித்து ரூ.6.65-ஆக நிர்ணம் செய்யப்பட்டுள்ளது.
ஒரு முட்டையின் விலை நாமக்கல்லில் ரூ.6.65 ஆகவும், சென்னையில் 7.30 ஆகவும் நிர்ணம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.