வதேரா அசத்தல் அரைசதம் - சென்னை வெற்றிபெற 140 ரன்களை நிர்ணயித்தது மும்பை

டாஸ் வென்ற சென்னை பவுலிங் தேர்வு செய்தது. முதலில் ஆடிய மும்பை அணி 139 ரன்களை எடுத்தது.
வதேரா அசத்தல் அரைசதம் - சென்னை வெற்றிபெற 140 ரன்களை நிர்ணயித்தது மும்பை
Published on

சென்னை:

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, மும்பை அணி முதலில் களமிறங்கியது. சென்னை அணியின் துல்லியமான பந்துவீச்சில் மும்பை அணி சிக்கியது.

கேமரூன் கிரீன் 6 ரன்னிலும், இஷான் கிஷன் 7 ரன்னிலும் அவுட்டாகினர். கேப்டன் ரோகித் சர்மா டக் அவுட்டாகி, மோசமான சாதனை படைத்தார்.

அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவுடன், நேஹால் வதேரா ஜோடி சேர்ந்தார். 4வது விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்த நிலையில் சூர்யகுமார் 26 ரன்னில் வெளியேறினார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் வதேரா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அவர் 64 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், மும்பை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 139 ரன்களை எடுத்தது.

சென்னை அணியின் பதீரனா 3 விக்கெட்டும், தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com