3டி-யில் வெளியாகும் அக்‌ஷய் குமார் படம்

அக்‌ஷய் குமார் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் புதிய படம் வருகிற ஆகஸ்ட் 19-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
அக்‌ஷய் குமார்
அக்‌ஷய் குமார்
Published on

அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகி உள்ள இந்தி படம் ‘பெல் பாட்டம்’. 1980-களில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ரஞ்சித் எம்.திவாரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் அக்‌ஷய் குமாருடன் வாணி கபூர், ஹியூமா குரோஷி, லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கொரோனா முதல் அலையின்போதே லண்டனில் ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டனர்.

பெல் பாட்டம் படத்தின் போஸ்டர்

இதையடுத்து பின்னணி பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாரான சமயத்தில், கொரோனா 2-வது அலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் ஓடிடி-யில் வெளியிட திட்டமிட்டிருந்தனர். பின்னர் சில பிரச்சனைகளால் ஓடிடி முடிவை கைவிட்ட படக்குழு, ஆகஸ்ட் 19-ந் தேதி திரையரங்கில் வெளியிடப்படும் என அறிவித்தனர். கொரோனா 2-வது அலைக்கு பின் வெளியாகும் பிரம்மாண்ட படம் என்பதால், ரசிகர்களை ஈர்க்க ‘பெல் பாட்டம்’ படத்தை ‘3டி’யிலும் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com