கடினமான காட்சியிலும் அஞ்சலி எளிதாக நடிப்பார்: இயக்குனர் ராம்

ராம் இயக்கும் ‘பேரன்பு’ படத்தில் நடித்து வரும் அஞ்சலி கடினமான காட்சியிலும் எளிதாக நடித்து விடுவதாக இயக்குனர் ராம் புகழ்ந்திருக்கிறார்.
கடினமான காட்சியிலும் அஞ்சலி எளிதாக நடிப்பார்: இயக்குனர் ராம்
Published on

“எனது ‘கற்றது தமிழ்’ படத்தில்தான் அஞ்சலி முதலில் அறிமுகமானார். அதில் சிறப்பாக நடித்தார். அவரை நாயகியாக நடிக்க வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்று ஆசை உள்ளது.

‘தரமணி’ படத்தில் சிறிய வேடம் என்றாலும் எனக்காக கொஞ்சமும் யோசிக்காமல் நடித்தார். இப்போது ‘பேரன்பு’ படத்தில் ஒரு அழுத்தமான பாத்திரத்தில் நடிக்கிறார். கடினமான காட்சியில் கூட அஞ்சலி எளிதாக நடித்து விடுவார். இந்த படம் அவரை பெரிதாக பேச வைக்கும்.

‘பேரன்பு’ படத்துக்கு பிறகு அஞ்சலிக்காக ஒரு கதையை யோசித்து வைத்திருக்கிறேன். அதில் அஞ்சலியை கதாநாயகியாக நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறேன்” என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com