எத்தனால் பெட்ரோலால் மைலேஜ் குறைவு: யூடியூபர் குற்றச்சாட்டு- மெர்சிடிஸ் பென்ஸ் அளித்த விளக்கம்..!

பெட்ரோல் நிலைய எரிபொருளில் எத்தனால் கலந்திருப்பதால் மைலேஜ் குறைந்துள்ளது என குற்றம்சாட்டினார்.
Mercedes Benz India clarifies BS VI cars are compatible with E20
Published on

மெர்சிடிஸ் பென்ஸ் மைலேஜ் புகார்:

மெர்சிடிஸ் பென்ஸ் BS VI காரில், எத்தனால் கலந்த எரிபொருள் நிரப்பப்பட்ட போது, தனது வாகனத்தின் மைலேஜ் கடுமையாக குறைந்துவிட்டதாக பிரபல யூடியூபர் தெரிவித்தார்.

இந்த புகாருக்கு எக்ஸ் தளத்தில் பதிலளித்த பென்ஸ் நிறுவனம், இந்த வகையான அனைத்து கார்-களும் E20 பெட்ரோலுடன் முழுமையாக பொருந்தக்கூடியவை என தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பிரபல யூடியூபராக அறியப்படும் சௌரவ் ஜோஷி, தனது மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்யூவி காரின் மைலேஜ், 48 மணி நேரத்திற்குள் 17 கிலோ மீட்டரில் இருந்து வெறும் 5 கிலோ மீட்டராக குறைந்துவிட்டதாகக் கூறினார்.

உள்ளூர் பெட்ரோல் நிலையங்களில் எத்தனால்(E20) கலந்த எரிபொருள் நிரப்பியதால் மைலேஜ் குறைந்துள்ளது என்று ஜோஷி குற்றம் சாட்டினார்.

முன்னதாக முழு டேங்கில் எரிபொருளை நிரப்பிய பிறகு, சுமார் 800 கி.மீ. தூரம் பயணிக்க முடிந்தது. ஆனால் தற்போது 480 கி.மீ. மட்டுமே பயணிக்க முடிகிறது.

இந்தத் திடீர் சரிவு, தனது ஜெர்மன் எஸ்யூவி காரின் பெட்ரோல் இன்ஜினுக்கு ஏற்படக்கூடிய சேதம் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா பதில்:

யூடியூபரின் இந்த வீடியோ வைரலான சிறிது நேரத்திலேயே மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா ஒரு அறிக்கையை வெளியிட்டது.

அந்த அறிக்கையில், “மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தில், வாடிக்கையாளர் பாதுகாப்பு, வாகன நம்பகத்தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவை எங்களுக்கு முதன்மையான முக்கியத்துவம் வாய்ந்தவை.

அனைத்து மெர்சிடிஸ்-பென்ஸ் பெட்ரோல் BS VI வாகனங்களும் E20 எரிபொருளுடன் கணிசமான அளவில் இணக்கமானவை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் அதற்கேற்ப சான்றளிக்கப்பட்டுள்ளன.

வாடிக்கையாளர்களின் எந்தவொரு தொழில்நுட்பக் கேள்விகளுக்கும் உதவுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com