

பெங்களூருவில் தனது புதிய தயாரிப்பான எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த மாடல், மலிவு விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவில் நிறுவனத்தின் இருப்பை விரிவுபடுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் புதிய ஸ்கூட்டர், ஏத்தரின் மாடுலர் EL பிளாட்ஃபார்மைப் பயன்படுத்தும் முதல் ஸ்கூட்டராக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த வகை ஸ்கூட்டர்கள் அன்றாட நடைமுறைக்கு உகந்த மற்றும் குடும்பத்தை மையமாகக் கொண்ட வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
450X உடன் ஒப்பிடுகையில், இந்த புதிய ஸ்கூட்டரில் நீண்ட வீல்பேஸ், அகலமான இருக்கை மற்றும் பெரிய ஃப்ளோர் போர்டு ஆகியவை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்கூட்டரில், ஹேண்டில்பாரில் பொருத்தப்பட்ட ஹெட்லைட் மற்றும் முன்பக்க ஏப்ரன் முழுவதும் அகலமான LED DRL இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இது பெரிய 14-இன்ச் முன்பக்க சக்கரத்தையும், பின்பக்கத்தில் சிறிய 12-இன்ச் சக்கரத்தையும் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இந்த ஸ்கூட்டர்கள், 2 kWh முதல் 5 kWh வரையிலான பேட்டரி பேக்குகளைப் பொருத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய ஸ்கூட்டரில் ஸ்விங்ஆர்மில் பொருத்தப்பட்ட மின்சார மோட்டாரும் பயன்படுத்தப்பட உள்ளது.
முன்பக்க சஸ்பென்ஷன் பணிகளை டெலஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்க ஒற்றை ஷாக் அப்சார்பரும் கையாளும். அதே சமயம், பிரேக்கிங் அமைப்பில் முன்பக்க டிஸ்க் பிரேக்கும், பின்பக்க டிரம் பிரேக்கும் இடம்பெற வாய்ப்புள்ளது.
பெங்களூரில் ஆகஸ்ட் 29 அன்று இந்த இ-ஸ்கூட்டரை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.
இதன் விலை ரூபாய் 1 லட்சம் முதல் 1.25 லட்சம் வரையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.