

மனக் கவலைகள் அகலும் மாதம். ராசி அதிபதி செவ்வாய்க்கு லாபாதிபதி சனியின் பார்வை உள்ளது. இதனால் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். இந்த வாரத்தில் உலாவரும் கிரக நிலைகள் உங்களுக்கு நல்ல சுப யோகங்களை பெற்றுத் தரப்போகிறது. உங்களின் ஆற்றல், நேர்மறை எண்ணம் அதிகரிக்கும். மனக்கவலைகள் அகலும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள், மனச் சங்கடங்கள் மறையும். எதிர்காலம் பற்றிய பயம் விலகும். தன்னம்பிக்கை தைரியம் அதிகமாகும். மனதில் எண்ணிய திட்டங்களை செயல்படுத்த ஏற்ற நேரம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்ப உறவுகளிடம் அன்பு அதிகரிக்கும். சில சுப விரயங்கள் உண்டு. ஆன்மீக பணிகளில் மனம் ஈடுபடும். 23.7.2026 இரவு 7.01 முதல் 26.7.2026 இரவு 7.35 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பணம், நகை, விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்திருக்கவும். பணத்தை யாருக்கும் கடனாக தரவும், வாங்கவும் வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போட்டு கடனாக பெற்றுத்தரும் பணம் திரும்ப வர வாய்ப்பு இல்லை. ஆடி மாத செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபடும்.