தலைப்புச்செய்திகள்

Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்- 18 அக்டோபர் 2026
போட்டி அட்டவணைகளால் பயிற்சிக்கு நேரம் கிடைப்பதில்லை: சஞ்சு சாம்சன் குமுறல்

* மழை காரணமாக 5வது மற்றும் கடைசி டி20 போட்டி கைவிடப்பட்டது.

* இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் 2-2 என சமனில் முடிந்தது.

ஒரு நாள் இரவு மழைக்கே வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை: என்ன செய்யப் போகிறது தவெக அரசு?- டி.டி.வி. தினகரன்

* மழைநீர் வடிகால் ஆய்வு என்ற பெயரில் கேமராக்கள் முன் தோன்றி ரீல்ஸ் எடுப்பதை ஓரங்கட்டிவிட்டு..,

* மழைநீர் தேங்கும் பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

14 மணி நேர விசாரணை...200 கேள்விகள்..; கண்ணீர் விட்டு கதறிய ‘ஜெம்’ வீரமணி!...

*'ஜெம்' வீரமணியிடம், 14 மணி நேரம் போலீசார் அதிரடி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் 'ஜெம்' வீரமணி கண்ணீர் விட்டு கதறி அழுதபடி, பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.

*என்னிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கினார்கள். இப்போது என்னை கைது செய்வது ஏன்? என்று அவர் கதறி அழுதார்.

த.வெ.க.-வின் 3-வது மாநில மாநாடு: திருச்சி அல்லது நெல்லையில் நடத்த திட்டம் எனத் தகவல்

* த.வெ.க. முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தியது

* மதுரையில் 2-வது மாநாடு நடத்தப்பட்டது

கூட்டம் குறைந்ததால் மறைமலைநகர், சி.எம்.டி.ஏ. பூங்காவில் இருந்து தற்காலிகமாக இயக்கப்பட்ட பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும்
மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2026-ம் ஆண்டு ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்குச் செல்லும் பொது மக்களின் வசதிக்காக 5 இடங்களில் (கலைஞர் நூற்றாண்டு பஸ் முனையம் கிளாம்பாக்கம், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பஸ் நிலையம், கோயம்பேடு, மாதவரம் புதிய பஸ் நிலையம், கால நிலைப் பூங்கா தற்காலிகப் பஸ் நிலையம் மற்றும் மறைமலைநகர் தற்காலிகப் பஸ் நிலையம்) அமைந்துள்ள பஸ் நிலையங்களில் இருந்து சிறப்புப் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.

இடம் மாற்றம்

வெளியூர் செல்லும் பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் தற்காலிகப் பஸ் நிலையங்களில் இருந்து இயக்கப்பட்ட வழித்தட பஸ்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் வழக்கமாக இயக்கப்படும் நடை மேடைகளில் இருந்தும் இயக்கப்படுகிறது.

காலநிலைப் பூங்கா தற்காலிகப் பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை மார்க்கமாக போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி ஆகிய இடங்களுக்கு இயக்கப்பட்ட பஸ்கள், இன்று கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பஸ் முனையத்தின் வழக்கமாக இயக்கப்படும் நடைமேடை எண் 7-லிருந்தும் இயக்கப்படுகிறது.

கும்பகோணம் மார்க்கம்

மறைமலைநகர் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து கும்பகோணம், நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய இடங்களுக்கு இயக்கப்பட்ட பஸ்கள், இன்று கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பஸ் முனையத்தின் வழக்கமாக இயக்கப்படும் நடைமேடை எண் 5-லிருந்தும் இயக்கப்படுகிறது. பயணிகள் அனைவரும் இந்த மாற்றத்தை கருத்தில் கொண்டு தங்களது பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

AI மூலம் ஆபாசப் படங்கள்: சட்ட நடவடிக்கை பாயும் என நடிகை நேகா சர்மா கடும் எச்சரிக்கை!
தொழில்நுட்ப வளர்ச்சி ஒருபுறம் பல்வேறு நன்மைகளை வழங்கி வரும் நிலையில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பிரபலங்களின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் தவறாகச் சித்தரிக்கும் சம்பவங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், தனது முகத்தையும் உருவத்தையும் அனுமதியின்றி பயன்படுத்துவோருக்கு பிரபல நடிகை நேகா சர்மா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அனுமதியின்றி உருவத்தைச் சிதைப்பதா? - நேகா சர்மா கண்டனம்:

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் தனது உருவத்தைத் தவறான முறையில் சித்தரித்துப் படங்களும் வீடியோக்களும் உருவாக்கப்படுவதற்கு நடிகை நேகா சர்மா தனது சமூக வலைதளப் பதிவில் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், "எனது அனுமதியின்றி எனது முகத்தையோ உருவத்தையோ பயன்படுத்திச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் படங்களை உடனடியாக உருவாக்குவதையும் பரப்புவதையும் நிறுத்த வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் செயல்

மேலும் இந்த விவகாரம் குறித்துப் பேசிய அவர், "இதுபோன்ற போலியான ஆபாசப் படங்களை உருவாக்குவதற்கு நான் யாருக்கும் அனுமதி அளிக்கவில்லை. இணையத்தில் ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ள என் சம்பந்தப்பட்ட அனைத்து போலிப் படங்களையும் வீடியோக்களையும் உடனடியாக நீக்க வேண்டும். எனது முகத்தைத் தவறான முறையில் பயன்படுத்துவது என் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் செயல்" என்று தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

சமூக வலைதளங்களில் பரப்புபவர்களுக்கும் எச்சரிக்கை

தனது உருவத்தைத் தவறாகச் சித்தரிப்பவர்களுக்கு எதிராக மட்டுமின்றி, அத்தகைய போலிப் படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் லைக் செய்பவர்கள், பதிவிடுபவர்கள் மற்றும் பிறருக்குப் பகிர்ந்து பரப்புபவர்கள் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேகா சர்மா எச்சரித்துள்ளார்.

சமீபகாலமாகப் பிரபல நடிகைகளின் முகங்களை டீப்ஃபேக் தொழில்நுட்பம் மூலம் ஆபாசமாகச் சித்தரிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கு எதிராக நடிகை நேகா சர்மா எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு திரைத்துறையிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் ஆதரவைப் பெற்று வருகிறது.

ஆயுத பூஜை, விஜயதசமி: இரு நாட்களுக்கு மெட்ரோ ரெயில் அட்டவணையில் மாற்றம்
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி ஆகிய இரு நாட்களில் மெட்ரோ ரெயில் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் நாளை ஆயுத பூஜையும், நாளை மறுதினம் விஜயதசமியும் கொண்டாடப்பட உள்ளது.

இந்த 2 நாட்களும் அரசு விடுமுறை தினம் என்பதால், மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை அட்டவணை

இந்நிலையில், ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு இரு நாட்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறை நாட்களான திங்கட்கிழமை (19-10-2026) மற்றும் செவ்வாய்க்கிழமை (20-10-2026) ஆகிய நாட்களில் மெட்ரோ ரெயில்கள் ஞாயிறு கால அட்டவணைப்படி இயக்கப்படும்.

பச்சை, நீல வழித்தடங்கள்

காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை பின்வரும் நேர இடைவெளிகளில் இயக்கப்படும்.

காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை 7 நிமிட இடைவெளில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

மஞ்சள் வழித்தடம்

காலை 07:00 மணி முதல் இரவு 9 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

பயணிகள் அதற்கேற்ப தங்களது பயணங்களைத் திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

"நான் ஒரு கஞ்சப்பெண், பணத்தை முதலீடு செய்ய பயமாக இருக்கிறது" - நடிகை நிகிலா விமலின் ஓபன் டாக்!
தமிழ் மற்றும் மலையாளம் திரைத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நிகிலா விமல், தான் ஒரு கஞ்சப்பெண் என்றும், பணத்தை முதலீடு செய்து பெருக்குவதில் தனக்கு இருக்கும் பயம் குறித்தும் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.

பொதுவாகத் திரைத்துறையினர் என்றாலே ஆடம்பர வாழ்க்கை, சொகுசு கார்கள், விலையுயர்ந்த ஆடைகள் என்றுதான் பலரும் நினைப்பார்கள்.

ஆனால், அதற்கு முற்றிலும் மாறாகப் பணம் குறித்த தனது எளிய மற்றும் பாதுகாப்பான பார்வையைப் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் நிகிலா விமல்.

‘நான் ஒரு கஞ்சப்பெண்; ஆனால் பணத்தை இரட்டிப்பாக்கத் தெரியாது!’

சேமிப்பு மற்றும் முதலீடு குறித்த கேள்விக்கு பதிலளித்த நிகிலா விமல், "நான் சேமிப்பு போன்ற விஷயங்களில் மிகவும் மோசமானவள். பணத்தை எங்கும் முதலீடு செய்ய மாட்டேன்;

ஆனால் தேவையில்லாமல் செலவழிக்காமல் சேமித்து வைப்பேன். அந்த வகையில் நான் ஒரு கஞ்சன்தான். ஆனால், கையில் இருக்கும் பணத்தை எப்படி இரட்டிப்பாக்குவது என்று எனக்குத் தெரியாது" எனத் தெரிவித்துள்ளார்.

பழைய பாணி மனநிலை மற்றும் நஷ்ட பயம்

தொடர்ந்து பேசிய அவர், தான் மற்றும் தன் குடும்பத்தினர் பணம் விஷயத்தில் இன்னும் பழைய பாணியையே பின்பற்றுவதாகக் குறிப்பிட்டார். "உதாரணமாக, என்னிடம் ஐந்து லட்சம் ரூபாய் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

யாராவது வந்து அந்தப் பணத்தை ஏதேனும் ஒரு திட்டத்தில் முதலீடு செய்து 10 லட்சமாக மாற்றலாம் என்று சொன்னால், என் அம்மாவுக்குப் பயமாக இருக்கும். எனக்கும் பயமாகத்தான் இருக்கும். பேராசைப்பட்டு இருக்கும் ஐந்து லட்சத்தையும் இழந்துவிடக் கூடாது, அதை பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றுதான் நாங்கள் நினைப்போம்" என்று கூறியுள்ளார்.

பேராசை இல்லாத வாழ்க்கை முறை

பணத்தின் மீதான தனது பேராசையற்ற அணுகுமுறையைப் பகிர்ந்துகொண்ட நிகிலா, "பணத்தைப் பெருக்க வேண்டும் என்ற ஆசையைவிட, கையில் இருக்கும் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதற்கே நான் முக்கியத்துவம் கொடுப்பேன்.

என்னிடம் இருக்கும் 5 லட்சம் ரூபாயை வைத்தே நான் சாகும் வரை வாழ முடியும். அதை 10 லட்சமாகவோ, 20 லட்சமாகவோ மாற்ற வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை. அப்படிப் பணத்தைப் பெருக்குவதில் எனக்கு ஒருவித பயம் இருக்கிறது" என்று வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

முதலீடு செய்ய ஆசை... ஆனால் ரிஸ்க் எடுக்க பயம்!

முதலீட்டு ஆலோசனைகள் குறித்துப் பேசுகையில், "நானே சில நேரங்களில் முதலீட்டு ஆலோசனை நிறுவனங்களைத் தொடர்புகொண்டு பேசுவேன். முதலீடு செய்யத் தயாராகத்தான் இருக்கிறேன். ஆனால், அவர்களிடம் 'முதலீடு செய்வதில் இருக்கும் சிக்கல்கள் மற்றும் ரிஸ்க்குகள் குறித்து என்னிடம் சொல்லாதீர்கள்' என்று கூறிவிடுவேன்.

ஏனென்றால், அதில் இருக்கும் நஷ்டம் அல்லது ஆபத்துகளைக் கேட்டால் எனக்குப் பயமாகிவிடும்" என்று இயல்பாகக் கூறியுள்ளார்.

பணம் சம்பாதிப்பது ஒரு கலை என்றால், அதைச் சரியாக முதலீடு செய்து பெருக்குவது மற்றொரு கலை. ஆனால், முதலீட்டில் இருக்கும் அபாயங்களை நினைத்துப் பயப்படுபவர்களின் எதார்த்தமான மனநிலையை நடிகை நிகிலா விமலின் இந்த நேர்காணல் அப்பட்டமாகப் பிரதிபலிப்பதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆயுதபூஜை, விஜயதசமி: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

நவராத்திரி எனப்படும் ஒன்பது திருநாட்களின் இறுதியில், ஒன்பதாவது நாளான ஆயுத பூஜை மற்றும் பத்தாவது நாளான விஜயதசமி திருநாட்களை பக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடி மகிழும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

லட்சுமி வடிவில் வழிபட்டால் செல்வம் பெருகும்.

ஆதிபராசக்தியை துர்க்கை வடிவில் வழிபட்டால் வீரம் பிறக்கும். லட்சுமி வடிவில் வழிபட்டால் செல்வம் பெருகும். சரஸ்வதி வடிவில் வழிபட்டால் கல்வி சிறந்தோங்கும் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில், நவராத்திரி பண்டிகையின் முதல் மூன்று நாட்களில் துர்க்கா தேவியையும், அடுத்த 3 நாட்களில் லட்சுமி தேவியையும், கடைசி 3 நாட்களில் சரஸ்வதி தேவி யையும் மக்கள் பக்தியோடு வணங்கி வழிபடுவார்கள்.

ஒவ்வொருவரின் வாழ்வுக்கும் ஆதாரமாகத் திகழ்கின்ற அவரவரது தொழிலின் மேன்மையைப் போற்றும் வகையில், மக்கள் தத்தமது தொழிற் கருவிகளுக்கெல்லாம் பூஜை செய்து வழிபடும் திருநாளே ஆயுத பூஜையாகும்.

அத்தனை காரியங்களும் வெற்றியில் முடியும்

விஜயதசமி திருநாளில் தொடங்கும் அத்தனை காரியங்களும் வெற்றியில் முடியும் என்ற நம்பிக்கையில், மக்கள் அன்னை மகா சக்தியை வழிபட்டு நற்காரியங்களைத் தொடங்கும் வெற்றித் திருநாளே விஜய தசமி பண்டிகையாகும்.

செய்யும் தொழிலே தெய்வம் என்பதையும், உழைப்பின் மூலமே வெற்றி என்பதையும் உணர்த்தும் வகையில் ஆயுத பூஜையையும், விஜய தசமியையும் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவரும், அனைத்து வளமும், நலமும் பெற்று சிறப்போடு வாழ்ந்திட வேண்டும் என்ற  எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

ஜி.கே.வாசன், டிடிவி தினகரன்

இதேபோல் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர். தனபாலன், ஜி.எஸ்.டி.யு.சி. தலைவர் மு.பன்னீர் செல்வம், தேசிய நாடார் சங்க பொதுச் செயலாளர் டி.விஜயகுமார், தமிழ்நாடு பண்பாட்டை தொழிலாளர்கள் சங்க தலைவர் சேம. நாராயணன் ஆகியோரும் வாழ்த்தி செய்தி வெளியிட்டுள்ளனர்.

சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்ட இசையமைப்பாளர் தேவாவின் உடல் - மாலை நல்லடக்கம்
சென்னையில் பிரபல இசையமைப்பாளர் தேவா மாரடைப்பால் நேற்று உயிரிழந்த நிலையில், இன்று இறுதி சடங்கிற்காக அவரது உடல் சொந்த ஊரான மாங்காட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது.

தேவனேசன் சொக்கலிங்கம் என்ற இயற்பெயருடன் பிறந்த தேவா, 1986-ஆம் ஆண்டு வெளியான மாட்டுக்கரை மன்னாரு திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இதையடுத்து 1990-இல் வெளியான வைகாசி பொறந்தாச்சு திரைப்படம், இசையமைப்பாளர் தேவாவிற்கு முதல் மாநில திரைப்பட விருதை பெற்று தந்தது.

இதைத்தொடர்ந்து ரஜினிகாந்த், கமல் ஹாசன், ராமராஜ், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட் பல திரைப்பிரபலங்களின் படங்களுக்கு தேவா இசையமைத்தார்.

இந்த நிலையில் நேற்று காலை நெஞ்சு வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முதலமைச்சர் அஞ்சலி

இதையடுத்து தேவாவின் இறப்பிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

சென்னையில் உள்ள தேவா வீட்டிற்கு நேற்று வந்த தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், அவரது இறுதி அஞ்சலி முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என தெரிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீகாந்த் தேவா, சென்னை டி.நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12 மணி வரை திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தனது தந்தையின் உடல் வைக்கப்படும் என தெரிவித்தார்.

சொந்த ஊரில் அடக்கம்

இந்த நிலையில், இன்று மதியம் 12 மணியளவில் இசையமைப்பாளர் தேவாவின் உடல், சென்னையில் இருந்து அவரது சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகில் உள்ள மாங்காடு கிராமத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

தேவாவின் உடல் மாங்காடு கிராமத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது.

ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை முதல்-அமைச்சர் விஜய் மழை நிலவரம் பற்றி கேட்டறிந்தார்: மாநகராட்சி கமிஷனர் சமீரன் தகவல்
சென்னையில் நேற்று இரவு மாநகராட்சி கமிஷனர் சமீரன் மழை பாதிப்புகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

சென்னையில் இரவு எதிர்பாராத விதமாக மிக அதிக மழை ெபய்தது. வட சென்னை பகுதிகள் மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் பெரிய அளவில் மழைப்பொழிவு இருந்தது.

பாரிமுனை, மணலி, திருவொற்றியூர், சாத்தான்காடு, என்.எஸ்.சி. போஸ் சாலை, பிரகாசம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் 5 மணிநேரம் வரையில் மழை பெய்தது. வடகிழக்கு பருவ மழையை பொறுத்தவரையில் 70 செ.மீ. வரை  சராசரியான மழை அளவாக இருக்கும். ஆனால் நேற்று இரவு ஒரே நாளில் பாரிமுனையில் 36 செ.மீ. மழை பொழிந்தது.

மழை பாதிப்புகளை சரி செய்ய 15 ஆயிரம்

சூப்பர் எல்நினோ காரணமாக வடகிழக்கு பருவ மழை பாதிப்பு அதிக அளவில் இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். வானிலை ஆய்வு மையமும் அதிகனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. இருப்பினும் ஒரே நாளில் இவ்வளவு மழை பெய்யும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. மாநகராட்சி களப்பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட 15 ஆயிரம் பேர் மழை பாதிப்புகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். மாநகராட்சி அதிகாரிகளும் இரவில் பணியில் இருந்தனர்.

முதல்-அமைச்சர் விஜய் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மழை நிலவரம் பற்றி கேட்டறிந்தார்

பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா இரவு 2.30 மணியளவில் கட்டப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டார். முதல்-அமைச்சர் விஜய் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மழை நிலவரம் பற்றி கேட்டறிந்தார். அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்து மழை பாதிப்பை சரி செய்து வருகிறோம். பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இரவில் தத்தளித்த சென்னை: பெரும்பாலான இடங்களில் விடிவதற்குள் அகற்றப்பட்ட மழைநீர்
சென்னையில் நேற்று இரவு கொட்டித் தீர்த்த அதி கனமழை காரணமாக 280 இடங்களில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து சென்னை மாநகராட்சி சார்பில் அதனை சரி செய்வதற்காக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

மாநகராட்சி கமிஷனர் சமீரன் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தேங்கிய மழை நீைர வடிய வைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதற்காக ராட்சத ஜெனரேட்டர்கள் மற்றும் டிராக்டர்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டன.

273 இடங்களில் மழைநீர் அகற்றம்

இதனால் இன்று காலைக்குள் 273 இடங்களில் மழைநீர் முற்றிலுமாக அகற்றப்பட்டதாக மாநகராட்சி கமிஷனர் சமீரன் தெரிவித்தார். 9 இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளன. அவை அனைத்தும் உடனடியாக அகற்றப்பட்டது. இரவில் கொட்டிய மழை காரணமாக நிவாரண முகாம்களும் தயார் நிலையில் இருந்தன. ஆனால் முகாம்களுக்கு பொதுமக்கள் யாரும் தஞ்சம் அடையவில்லை. மழை வெள்ளத்தை உடனடியாக அகற்றியதே இதற்கு காரணம் என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

13,500 பேருக்கு காலை உணவு

இருப்பினும் இன்று காலையில் 13,500 பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது. இன்றும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் உஷார் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிக்கிம் ஆளுநர் நியமனத்திற்கு எதிராக களத்தில் இறங்கிய மாணவர்கள் - தீவிரமடையும் போராட்டம்
உத்தரகாண்டில் கடந்த 2022-ஆம் ஆண்டு இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியாக கூறப்படும் பாஜக மூத்த தலைவர் துஷ்யந்த் குமார் கெளதம், சிக்கிம் ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இளம்பெண் மர்மமான முறையில் கொலை

உத்தரகாண்டின் பெளரி கார்வால் மாவட்டத்தில் உள்ள வனந்த்ரா ரிசார்ட்டில் அலுவலக ஊழியராக 19 வயதான அங்கிதா பண்டாரி என்ற இளம்பெண் பணிபுரிந்து வந்தார்.

இதையடுத்து கடந்த 2022-ஆம் ஆண்டு இளம்பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ரிசார்ட் உரிமையாளர் புல்கித் ஆர்யா மற்றும் இரண்டு ஊழியர்கள் குற்றவாளிகளாக கண்டறியப்பட்டு 2023-ஆம் ஆண்டு அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆயுள் தண்டனை

இதைத்தொடர்ந்து அங்கிதா உயிரிழந்த வழக்கில், முக்கிய குற்றவாளி பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த துஷ்யந்த் குமார் கெளதம் என்பவர் தான் என்று இளம்பெண்ணின் பெற்றோர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.

அங்கிதாவின் கோரிக்கையை ஏற்று, உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, 2026 ஜனவரியில் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்தார்.

இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் துஷ்யந்த் குமாரை சிக்கிம் ஆளுநராக நியமனம் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பாஜக தலைவர் அக்டோபர் 19-ஆம் தேதி சிக்கிம் ஆளுநராக பதவி ஏற்க உள்ளார்.

மாணவர்கள் போராட்டம்

இதையடுத்து மர்மமான முறையில் உயிரிழந்த இளம்பெண் குறித்து சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், துஷ்யந்த் குமாரை புதிய ஆளுநராக நியமனம் செய்யக்கூடாது என மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போரட்டம் குறித்து அமைப்பாளர் அஞ்சலி கூறுகையில், “இது குடிமக்களால் முன்னெடுக்கப்பட்ட ஒரு முயற்சி என்றும், பங்கேற்பாளர்கள் எந்தவித அரசியல் சார்புமின்றி ஒன்றுகூடியுள்ளனர்.

மக்களின் உணர்வுகள் சில காலமாக வலுப்பெற்று வந்தன. நிறைய விஷயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன, மேலும் மக்கள் தங்கள் நம்பிக்கைகளையும் கருத்துக்களையும் வெளிப்படுத்த ஒரு தளத்தை விரும்பினர்.

அனுமதி பெறுவதற்கு நான் மற்றவர்களை சார்ந்திருக்கக் கூடாது என்று முடிவு செய்தேன். அதனால் நான் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் சென்றேன், அவர்கள் இங்கு போராட்டத்தை நடத்துவதற்கு எங்களுக்கு ஆதரவும் ஊக்கமும் அளித்தனர்.

அவர் பதவியேற்று கொண்டதால் மட்டும் எங்கள் குரல்கள் அடங்கிவிடும் என்று அர்த்தமல்ல. நாங்கள் எங்கள் கவலைகளைத் தொடர்ந்து எழுப்புவோம்.

போராட்டம் தொடரும்

தற்போது இங்கு இல்லாத பலர் இருக்கிறார்கள், ஆனால் அவர்களின் இதயங்கள் இந்த இயக்கத்துடனேயே உள்ளன. மக்கள்தான் அவர்களை ஆட்சியில் இருக்கச் செய்கிறார்கள்.

அவர்கள் தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க விரும்பினால், மக்களின் நம்பிக்கையை தக்க வைத்து கொள்ள வேண்டும்.

நியமனம் நடந்தாலும், நாங்கள் போராட்டத்தை நிறுத்த மாட்டோம். நாங்கள் தொடர்ந்து அமைதியான முறையில் போராடி, எங்கள் எதிர்ப்புகளை எழுப்புவோம்,” என்று அஞ்சலி கூறினார்.

ஒரு நாள் இரவு மழைக்கே வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை: என்ன செய்யப் போகிறது தவெக அரசு?- டி.டி.வி. தினகரன்
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரவு பெய்த தொடர் கனமழையால் குடியிருப்புகளும் சாலைகளும் வெள்ளக்காடாக மாறியிருப்பதும், பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியிருப்பதும் சென்னை மாநகராட்சி மற்றும் தவெக அரசின் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

சென்னையில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தும், மழைநீர் தேங்குவதை தடுக்கவும், தேங்கியிருக்கும் மழைநீர் தடையின்றி வெளியேறுவதை உறுதி செய்யவும் உரிய நடவடிக்கைகளை எடுக்காததன் விளைவாகவே, ஒருநாள் இரவு மழைக்கே சென்னை மாநகரமே முழுமையாகத் தத்தளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஜோசப் விஜய் உணர வேண்டும்

சென்னை மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு மண்டலத்திற்கும் அமைச்சர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் கண்காணிப்புப் பணிக்காக நியமித்ததோடு தன் கடமை முடிந்துவிட்டதாகக் கருதும் முதலமைச்சர் ஜோசப் விஜய், களப்பணிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுமே பொதுமக்களை மழை பாதிப்புகளிலிருந்து காக்கும் என்பதை இனியாவது உணர வேண்டும்.

எனவே, மழைநீர் வடிகால் ஆய்வு என்ற பெயரில் கேமராக்கள் முன் தோன்றி ரீல்ஸ் எடுப்பதை ஓரங்கட்டிவிட்டு, களப்பணிகளுக்கு முன்னுரிமை அளித்து, மழைநீர் தேங்கும் பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, அடுத்தடுத்த நாட்களில் எதிர்பார்க்கப்படும் பெருமழையை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் முன்னெடுத்திட வேண்டும் என சென்னை மாநகராட்சியையும் தவெக அரசையும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்துடன் மீண்டும் கைகோர்க்கும் நயன்தாரா?
திரையுலகில் தொடர் வெற்றிகரமான திரைப்படங்களை வழங்கிவரும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் பிரம்மாண்டமான திரைப்படம் 'தர்மன்'. கமர்ஷியல் ரீதியில் மாபெரும் வெற்றியடைந்த 'ஜெயிலர் 2' படத்தைத் தொடர்ந்து இந்தத் படம் உருவாகி வருவதால், இதன் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் நயன்தாரா இணைவது குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகி திரையுலக வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

இளம் திறமையாளரான அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் 'தர்மன்' திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் கமல்ஹாசன் தயாரித்து வருகிறார். அதிரடி ஆக்‌ஷன் எண்டர்டெய்னராக உருவாகும் இப்படத்தில் ஏற்கனவே சிம்ரன், ஸ்ரீலீலா, ராஷி கண்ணா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் பலரும் நடித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்தப் பட்டியலில் தற்போது தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் இணைந்திருப்பது படத்திற்கு மேலும் பலம் சேர்த்துள்ளது.

முன்னதாக பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த 'சந்திரமுகி' திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்து ரசிகர்களின் மனதை வென்றவர் நயன்தாரா. அதனைத் தொடர்ந்து பல ஆண்டுகள் கழித்து, தற்போது மீண்டும் இருவரும் 'தர்மன்' படத்தின் மூலமாக இணைந்து நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. குறிப்பாக, நயன்தாரா இப்படத்தில் ஏதோ பெயரளவிற்கு வந்து செல்லும் ஒரு சிறிய சிறப்புத் தோற்றத்தில் நடிக்காமல், படத்தின் கதைப்போக்கில் முழுமையாக இடம்பெறும் மிக முக்கியமான மற்றும் வலுவான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. கோலிவுட்டின் இந்த நட்சத்திரக் கூட்டணி மீண்டும் திரையில் ஒன்றுசேர்வது ரசிகர்களுக்கு மிகப்பெரிய சினிமா விருந்தாக அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

VIDEO- பிரான்ஸில் வெடித்த வன்முறை: தீயில் எரிந்து நாசமான வரலாற்றுச் சிறப்புமிக்க லிமோகேஸ் நகர மன்றம்!
பிரான்ஸ் நா்தில் விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடியை எதிர்த்து நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்கள் பெரும் வன்முறையாக வெடித்துள்ளன. அதிபர் இமானுவேல் மக்ரோனின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு  மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை எதிர்த்து பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நடத்திய மாபெரும் போராட்டம் கடுமையான வன்முறையாக வெடித்துள்ளது. நாட்டின் பல்வேறு நகரங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகப் போர்களைக் கடந்து நிலைத்து நின்ற வரலாற்றுச் சிறப்புமிக்க 143 ஆண்டுகள் பழமையான லிமோகேஸ் நகராட்சி அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டு முழுமையாக சேதமடைந்துள்ளது.

விலைவாசி உயர்வு

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழல் காரணமாக ஐரோப்பாவில் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனைத் தடுத்து நிறுத்தத் தவறிய அரசாங்கத்தைக் கண்டித்தும், வரவிருக்கும் அதிபர் தேர்தலை முன்னிட்டும் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் குதித்தனர்.

BREAKING: At least 1,200 people were arrested as 550,000 took to the streets over the rising cost of living and conditions in schools, per BBC.

Limoges' historic town hall was "largely lost" to a massive blaze, while Lyon's tourist office was also set on fire as violent protests swept across France.

Violent clashes erupted in Paris and other cities, with riot police deploying tear gas and water cannons as vehicles and buildings were set ablaze.

French authorities reported at least 150 police officers injured, alongside widespread looting and vandalism.
— Coin Bureau (@coinbureau) October 18, 2026

அமைதியான முறையில் தொடங்கப்பட்ட இந்த ஊர்வலம், மாஸ்க் அணிந்த சில வன்முறை கும்பல்களின் நுழைவால் மிகக் கடுமையான வன்முறையாக மாறியது.

தீயில் எரிந்து சாம்பல்

குறிப்பாக, லிமோகேஸ் நகரில் திரண்ட முகமூடி அணிந்த போராட்டக்காரர்கள் நகராட்சி கட்டடத்திற்குள் அத்துமீறி நுழைந்து தீ வைத்தனர். இந்த கொடூர தீ விபத்தால் பழமை வாய்ந்த அந்த கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து, மூன்றில் இரண்டு பங்கு பகுதிகள் முற்றிலாகவும் சாம்பலாகியுள்ளன. உள்ளூர் நிர்வாகத்தின் தகவல்படி, வரலாற்றுச் சின்னமான இந்த கட்டடம் தீயில் கருகியது பிரான்சின் கலாச்சார பாரம்பரியத்திற்கு மிகப்பெரிய பேரிழப்பாகும்.

பிரான்சின் இரண்டாவது பெரிய நகரமான மார்செய்யில், போராட்டக்காரர்கள் நகராட்சி அலுவலகத்தின் கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கு அலுவலகப் பொருட்களை அடித்து நொறுக்கியதுடன், சிலைகடத்தல்களிலும் ஈடுபட்டனர். நிலைமை கைமீறியதால் மேயர் உடனடியாக கூடுதல் காவல்துறையினரை அனுப்புமாறு கோரிக்கை விடுத்தார். இதேபோல் லீல் நகரிலும் மேயர் அலுவலகம் சூறையாடப்பட்டது.

1200 பேர் கைது

தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் வணிக வளாகங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் ஆடம்பர கடைகள் குறிவைத்து சூறையாடப்பட்டுள்ளன. வன்முறையைக் கட்டுப்படுத்தக் களமிறங்கிய காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்குமிடையே கடுமையான மோதல்கள் வெடித்தன. கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் நீர்த்தாரை வண்டிகளைப் பயன்படுத்தி காவல்துறையினர் கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். இந்த மோதல்களின் போது நாடெவிலும் இதுவரை 1,200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 150-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் நாட்டின் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு தெரிவித்துள்ளார். மேலும், செயின்ட்-எட்டியென் நகரில் நடந்த மோதலில் 17 வயது சிறுவன் ஒருவனின் கை காவல்துறை வீசிய கட்டுப்பாட்டுக் குண்டு வெடித்ததில் துண்டிக்கப்பட்ட துயரச் சம்பவமும் அரங்கேறியுள்ளது.

கடந்த செப்டம்பரில் பாரிஸ் புறநகர்ப் பகுதிகளில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் உள்ளூர் போராட்டமாகத் தொடங்கிய இந்த இயக்கம், தற்போது நாடு முழுவதிலும் உள்ள பொதுமக்களை ஈர்த்துள்ளது. பெட்ரோல் விலை உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவினங்களின் அதிகரிப்பு ஆகியவை பொதுமக்களின் ஆத்திரத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளன. பாரிஸ் நகரின் மையப்பகுதியில் உள்ள முக்கிய மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டு, அதிபர் மாளிகையைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிரான இந்த வன்முறைகளை வன்மையாகக் கண்டித்துள்ள அதிபர் இம்மானுவேல் மக்ரோன், பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியவர்கள் மற்றும் வன்முறையில் ஈடுபட்ட அனைவரும் சட்டத்தின் முன்நிறுத்தப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என எச்சரித்துள்ளார். வரவிருக்கும் அதிபர் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இந்த பொருளாதார நெருக்கடியும் வன்முறையும் பிரான்ஸ் அரசியல் களத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெளுத்து வாங்கிய கனமழை - சென்னை திரும்ப பொறுப்பு அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவு
சென்னையில் நேற்று பல இடங்களில் கனமழை பெய்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள 8 பேர் உடனடியான சென்னை வருமாறு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியுள்ள நிலையில், மாநிலத்தின்  பல்வேறு பகுதிகளில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை மாநகரின் 15 மண்டலங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக 8 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் மீட்பு பணிகளை விரைவுபடுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க அமைச்சர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

இதன்படி சென்னையில் வெள்ள நிவாரண முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்பார்வையிட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஒருங்கிணைப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தவெக அமைச்சர்களான அருண்ராஜ், ரமேஷ், விக்னேஷ், விஜய் பாலாஜி, லோகேஷ் தமிழ்செல்வன், பிரபு, தமிழன் பார்த்திபன் ஆகியோர் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொறுப்பு அமைச்சர்கள்

திருவொற்றியூர் மற்றும் மணலி - அமைச்சர் ரமேஷ்

தண்டையார்பேட்டை மற்றும் மாதவரம் - அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்

ராயபுரம் மற்றும் திரு.வி.க நகர் - அமைச்சர் அருண்ராஜ்

அம்பத்தூர் அண்ணா நகர் மற்றும் தேனாம்பேட்டை - அமைச்சர் விஜய பாலாஜி

கோடம்பாக்கம் மற்றும் வலசரவாக்கம் - அமைச்சர் பிரபு

ஆலந்தூர் மற்றும் அடையார் - அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்

பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் - அமைச்சர் விக்னேஷ்

இவர்கள் உடனடியாக சென்னை திரும்பி, மீட்பு பணிகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

14 மணி நேர விசாரணை...200 கேள்விகள்..; கண்ணீர் விட்டு கதறிய ‘ஜெம்’ வீரமணி!
'ஜெம்' வீரமணியிடம், 14 மணி நேரம் போலீசார் அதிரடி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் 'ஜெம்' வீரமணி கண்ணீர் விட்டு கதறி அழுதபடி, பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொழிலதிபர் 'ஜெம்' வீரமணி கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரால் சீரழிக்கப்பட்ட 10 சிறுமிகள், இதுவரை அவர்மீது சிறப்பு புலனாய்வு போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். ரகசிய விசாரணை மூலம் அவர்களது வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுவரை 6 போக்சோ வழக்குகள் உள்பட 7 வழக்குகள் வீரமணி மீது போலீசார் பதிவு செய்துள்ளனர். அதில் ஒரு வழக்கில் சிறுமியை தற்கொலை செய்ய தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. பதிவு செய்யப்பட்ட 7 வழக்குகளில், 4 வழக்குகளில் வீரமணி கைதாகி உள்ளார். அதில் ஒரு வழக்கு மதுரையில் பதிவு செய்யப்பட்ட வழக்காகும். குண்டர் சட்டத்திலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சிறப்பு புலனாய்வு படை போலீசார், 3 பிரிவுகளாக பிரிந்து வீரமணி மீதான வழக்குகளை விசாரித்து வருகிறார்கள்.

ஒரு பிரிவினர் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்கிறார்கள். வழக்கை முறையாக விசாரிக்காமல், வீரமணி மீதான வழக்கை கோர்ட்டில் முடித்து வைத்தது குறித்து 2-வது பிரிவு விசாரிக்கிறது. 3-வது பிரிவு வீரமணி மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க, ரூ.120 கோடி அளவுக்கு பணம் கைமாறியதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

கைது நடவடிக்கை அறிந்து கதறல்

வீரமணி கடந்த ஆகஸ்டு 29-ந்தேதியன்று கைது செய்யப்பட்டார். 84 வயது நிரம்பிய அவரை கைது செய்து, போலீசார் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்துவந்தனர். கைது செய்யப்பட்ட விவரம், முதலில் அவருக்கு தெரியாது. விசாரணைக்காகவே அழைத்து செல்கிறோம் என்று அவரிடம் போலீசார் கூறியுள்ளனர். கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தவுடன், அவர் கைது செய்யப்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் தேம்பி, தேம்பி அழுதபடி காரை விட்டு இறங்க மறுத்தார். என்னிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கினார்கள். இப்போது என்னை கைது செய்வது ஏன்? என்று அவர் கதறி அழுதார். போலீஸ் விசாரணைக்கும் அவர் ஒத்துழைக்க மறுத்தார். இதனால் கைது செய்தபோது, அவரிடம் சரியாக போலீசாரால் விசாரணை நடத்தமுடியவில்லை.

எனவே 3 நாட்கள் போலீஸ் காவலில் ஏற்கனவே புழல் சிறையில் வைத்து வீரமணியிடம் போலீசார் விசாரித்தார்கள். அப்போது வழக்கு விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காக அவர் யார், யாருக்கு எவ்வளவு பணம் கொடுத்தார் என்று விசாரணை நடத்தப்பட்டது. அவர் சொன்ன தகவலின்பேரில்தான், அவர் ரகசியமாக எழுதி வைத்திருந்த டைரியையும் போலீசார் கைப்பற்றினார்கள். அதில் யார், யாருக்கு எவ்வளவு பணம்கொடுத்தார் என்பது பற்றிய விவரங்கள் இருந்தன.

அதன் அடிப்படையில்தான் தற்போது போலீஸ் விசாரணை நடக்கிறது. இந்நிலையில், வீரமணியால் சீரழிக்கப்பட்ட சிறுமி ஒருவர், தற்கொலை செய்துகொண்டது குறித்து வீரமணியிடம் விசாரிக்க வேண்டியிருந்தது. இதற்காக மீண்டும் 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து, சிறையில் வைத்து வீரமணியிடம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்றுடன் வீரமணியிடம் சிறை காவல் விசாரணை முடிந்தது.

14 மணி நேரம் விசாரணை

வீரமணியிடம் கடந்த 2 நாட்களாக. மொத்தம் 14 மணி நேரம் சிறையில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். உதவி கமிஷனர் காயத்ரி தலைமையிலான போலீசார், 200 கேள்விகளை அவரிடம் கேட்டு விசாரணை மேற்கொண்டனர். சிறுமிகளை சீரழித்தது எப்படி? வழக்கை முடித்துவைக்க யார். யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது? குறிப்பிட்ட ஒரு நகைக்கடையில் தங்கக்கட்டிகள் உங்கள் பெயரில் வாங்கப்பட்டுள்ளது. அந்த தங்கக்கட்டிகள் யாருக்கு கொடுக்கப்பட்டது? என்பது குறித்தும் விசாரித்ததாக கூறப்படுகிறது.

200-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அந்த சாட்சிகள் சொன்ன தகவல்கள் குறித்தும் வீரமணியிடம் கேள்விகள் எழுப்பப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. சமூக வலைதளங்களில் வீரமணி பற்றிய செய்திகள் பரபரப்பாக வெளியான வண்ணம் உள்ளது. அதில் உள்ள தகவல்களையும் வீரமணியிடம் காட்டி, அதில் உள்ள உண் மைத்தன்மை குறித்தும் போலீசார் விசாரித்ததாக தெரிகிறது. வீரமணியிடம் போலீஸ் காவல் விசாரணை முடிந்துவிட்டதா ? என்று சிறப்பு புலனாய்வு அதிகாரிகளிடம் கேட்டபோது, 'தேவைப்பட்டால் மீண்டும் விசாரிப்போம்' என்று தெரிவித்தனர். 'ஐகோர்ட்டில் இதுதொடர்பான விசாரணை உள்ளதால், இந்த வழக்கு தொடர்பாக தேவை இல்லாத கருத்துகளை வெளியிட வேண்டாம்' என்று சிறப்பு புலனாய்வு படை போலீ சார் கேட்டுக்கொண்டனர்.

சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் போஸ்ட்: மெட்டாவுக்கு மத்திய அரசு அதிரடி வலியுறுத்தல்
இந்திய இறையாண்மையை பாதிக்கும் வகையில் வன்முறையை தூண்டும் பதிவுகளை கண்டறிந்து, அவற்றை தடுக்குமாறு மெட்டா நிறுவனத்திற்கு மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) வேண்டுகோள் விடுத்துள்ளது.

மெட்டா தலைமை நிறுவனத்தின் கீழ் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ஆகிய துணை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ஆகிய செயலிகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த வகையான செயலிகளை பயன்படுத்துவோர் சமூகத்தில் அமைதியை குலைக்கும் சில பதிவுகளை பதிவிட்டு நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

பொது அமைதியின்மை

ஒரு பயனர் இன்ஸ்டாகிராம் அல்லது பேஸ்புக் செயலியியை திறக்கும் போது, குழப்பம், வன்முறை மற்றும் பொது அமைதிக்கு தீங்கு விளைவிக்கும் பதிவுகள் பரிந்துரைக்கப்படுகிறது.

டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதாக போலியான செய்திகள் பரப்பப்பட்டன.

புகார்கள்

இந்த வகையான போலியான பதிவுகள் இணையத்தில் வேகமாக பரவுவதால், அதனை தடுக்குமாறு அரசாங்கத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் விதிகளின் கீழ் மெட்டா நிறுவனம் ஆறு விதிகளை பின்பற்றுமாறு மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) வேண்டுகோள் விடுத்துள்ளது.

6 விதிகள்

அதன்படி பொது அமைதியின்மையை ஏற்படுத்தி, வன்முறை மற்றும் சட்டவிரோத செயல்களைத் தூண்டக்கூடிய பதிவுகளை கண்டறிந்து தீர்வு காண தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து பயனர்களை தவறாக வழிநடத்தக்கூடிய, திரித்துக் கூறப்பட்ட பதிவுகளை பரிந்துரை செய்யாமல் மறுபரிசீலனை செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் பொது நிகழ்வுகளை காட்டும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பரிந்துரை செய்யும்போது போதுமான பின்னணித் தகவல்களை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

நான்காவதாக, செயலிகள் சில பதிவுகளை பரிந்துரை செய்யும்போது அதுதொடர்பான நம்பகமான தகவல்களின் பொருத்தமான பன்முகத்தன்மையை வழங்க முயல வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்து பரிந்துரை அமைப்புகள் மூலம் கணிசமான அளவில் தவறான கருத்துகள் பரவி, பொதுமக்களிடையே பரவலான குழப்பம், அச்சம், வன்முறை மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய உள்ளடக்கங்களை விரைவாக அடையாளம் கண்டு,

அதனை மதிப்பாய்வு செய்து, மேல் நடவடிக்கை எடுத்து வழிமுறைகளை வலுப்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இறுதியாக, மெட்டா நிறுவனம் சட்ட அமலாக்கத்துறை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசு நிறுவனங்களுடன் உரிய நேரத்தில் ஒத்துழைக்க வேண்டும் என்றும், தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021-ஆல் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் தகவல்களை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: முன்னணி வீரர்களை முடித்துவிட்ட ஜூனியர்கள்
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர்களான ஜோகோவிச், அல்காரஸ், ஸ்வரேஏவ், மெத்வதேவ் ஆகியோரை ஜுனியர் வீரர்கள் வீழ்த்தினர்.

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரர்கள் பலர் பங்கேற்று விளையாடினர்.

தொடரும் ஜோகோவிச் சோகம்

நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதிபெற்ற செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அதே சுற்றில் போலந்தின் ஹுயூபர்ட் ஹர்காக்சிடம் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

இதேபோல் 2வது சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், இத்தாலியின் லாரன்சோ முசெட்டி ஆகியோரும் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினர்.

அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி

மூன்றாவது சுற்றில் நம்பர் 2 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் பெல்ஜியத்தின் ஜிஜோ பெர்க்சிடம் 7-5, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

மேலும், அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாபே மற்றும் டெய்லர் பிரிட்ஸ், பிரான்சின் ஆர்தல் பில்ஸ்,  செக் குடியரசின் ஜிரி லெஹெகா ஆகியோர் தோல்வி அடைந்தனர்.

நான்காவது சுற்றில் கிரீசின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் ரஷியாவின் மெத்வதேவிடம் 4-6, 5-7 என தோல்வி அடைந்தார். மேலும்,

ரஷியாவின் கரண் கச்சனாவ், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் ஆகியோரும் தோல்வி அடைந்தனர்.

காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் டாமி பால், நார்வேயின் காஸ்பர் ரூட், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் ஆகியோர் தோல்வி அடைந்து வெளியேறினர்.

மெத்வதேவ், ஸ்வரேவ் தோல்வி

அரையிறுதியிலும் நம்பர் 1 வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், ரஷியாவின் டேனில் மெத்வதேவ் ஆகியோர் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினர்.

இன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் ரபேல் ஜோடார், சக நாட்டு வீரரான அலெஜாண்ட்ரோ டேவிடோவிச் போகினோவை சந்திக்கிறார். இருவரும் முதல் முறையாக ஷாங்காய் ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை: கடந்த 24 மணிநேரத்தில் பல்வேறு பகுதிகளில் பதிவான மழை விவரம்!
சென்னையில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், நேற்று முன்தினம் மாலையில் தொடங்கிய மழை நகரின் பல பகுதிகளில் கனமழையாகக் கொட்டித் தீர்த்தது.

சென்னையில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், நேற்று முன்தினம் மாலையில் தொடங்கிய மழை நகரின் பல பகுதிகளில் கனமழையாகக் கொட்டித் தீர்த்தது. குறிப்பாக வடசென்னை பகுதிகளில் இந்த மழை வெளுத்து வாங்கியது. வழக்கமான மழையை விஞ்சி, மேகவெடிப்பு காரணமாக இந்த கனமழை பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேகவெடிப்பின் தாக்கம்

சுமார் 20 முதல் 30 சதுர மீட்டர் பரப்பளவுக்குள், ஒரு மணி நேரத்தில் 10 சென்டி மீட்டருக்கும் அதிகமாக மழை பொழிந்தால் அது மேகவெடிப்பு என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில், வடசென்னைக்கு உட்பட்ட கார்கில் நகரில் 10.9 சென்டி மீட்டரும், திருவள்ளூர் மாவட்டம் மெப்பேடு பகுதியில் 10 செ.மீ. அளவிலும் மழை கொட்டியது. இதனால் இப்பகுதிகளில் மழைநீர் சாலைகளில் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியதுடன், தாழ்வான பகுதிகளில் குளம்போல தேங்கியது.

சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் பல்வேறு பகுதிகளில் பதிவான மழையின் விவரம்

* பாரிமுனை: 36 செ.மீ.

* கத்திவாக்கம்: 34.4 செ.மீ.

* மீனம்பாக்கம்: 29 செ.மீ.

* சென்னை சென்ட்ரல்: 27 செ.மீ.

* சாத்தாங்காடு: 26 செ.மீ.

* திருவொற்றியூர்: 22 செ.மீ.

* எண்ணூர்: 21 செ.மீ.

* கார்கில் நகர்: 19 செ.மீ.

* சைதாப்பேட்டை: 17 செ.மீ.

* வடபழனி: 16 செ.மீ.

* நுங்கம்பாக்கம்: 15 செ.மீ.

சென்னையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி அனைத்து சுரங்கப்பாதைகளிலும் போக்குவரத்து சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக திருவொற்றியூர் மற்றும் சந்தோஷபுரம் உள்ளிட்ட 10 இடங்களில் விழுந்த மரங்கள் தீயணைப்புப் படையினரால் உடனடியாக அகற்றப்பட்டன. மேலும், தியாகராய நகர் உள்பட 4 இடங்களில் சாலையோர மின் இணைப்புப் பெட்டிகளில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாகச் சிறிய தீ விபத்துகள் நிகழ்ந்தன. அவை உடனடியாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.

சென்னையில் நள்ளிரவு வரை கொட்டித்தீர்த்த இந்த கனமழையால், அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை முகாமில் இருந்து ஒரு சிறப்புக் குழுவினர் சென்னை வந்துள்ளனர். மாநில பேரிடர் மீட்பப் படையினருடன் இணைந்து தாழ்வான பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மீட்புப் பணிகள் குறித்து அமைச்சரும், மாநகராட்சி ஆணையரும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருடன் தீவிர ஆலோசனை நடத்தினர். மழை நீர் தேங்கினாலோ அல்லது அவசர உதவிகள் தேவைப்பட்டாலோ பொதுமக்கள் '1913' என்ற அவசர உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

த.வெ.க.-வின் 3-வது மாநில மாநாடு: திருச்சி அல்லது நெல்லையில் நடத்த திட்டம் எனத் தகவல்
த.வெ.க. 3-வது மாநில மாநாட்டை திருச்சி அல்லது நெல்லையில் நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. அதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த மாநாட்டை வெற்றி மாநாடாக நடத்த த.வெ.க. திட்டமிட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் உச்ச நடிகரான விஜய் கடந்த 2024-ம் ஆண்டு த.வெ.க. என்ற கட்சியை தொடங்கினார். அதே ஆண்டில் விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநாட்டை நடத்தி தமிழகத்தின் ஒட்டு மொத்த பார்வையையும் தன் பக்கம் ஈர்த்தார். லட்சக்கணக்கான இளைஞர்கள் கூடிய அந்த மாநாடு இந்தியா முழுவதும் பேசும் பொருளாக மாறி போனது.

தொடர்ந்து மதுரையில் 2-வது மாநாட்டை நடத்தினார். கட்சி தொடங்கி 2 ஆண்டுகளில் தமிழக சட்டசபை பொதுத்தேர்தலையும் சந்தித்த விஜய், மகத்தான வெற்றியை அரசியல் அரங்கில் பதிவு செய்தார். த.வெ.க. ஆட்சியை பிடித்தது. தமிழகத்தின் முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்றார்.

3-வது மாநாடு

சமீபத்தில் நடந்து முடிந்த மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் த.வெ.க. வெற்றி பெற்று, மக்கள் தங்கள் பக்கம் என்பதை நிரூபித்துக் காட்டியது. இந்தநிலையில், கட்சியின் 3-வது மாநாட்டை, வெற்றி மாநாடாக நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. த.வெ.க.வின் 3-வது ஆண்டு தொடக்கம், தேர்தல் வெற்றி, முதல்-அமைச்சர் விஜய் பிறந்தநாள் விழா என முப்பெரும் விழாவாக கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாநாட்டை திருச்சி அல்லது நெல்லையில் நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 3-வது மாநாடு நடக்க இருப்பதாகவும், இந்த மாநாட்டுக்கு வெற்றி மாநாடு என்று பெயர் சூட்டப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா இன்று விடுவிக்கப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை- சிஜேபி எச்சரிக்கை!
சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் இன்றுக்குள் விடுதலை செய்யப்படவில்லை என்றால், சட்டப்பூர்வமான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சிஜேபி பகிரங்கமாக எச்சரித்துள்ளது.

டெல்லியில் நடைபெற்ற 'லேரா தோ தேசியக்கொடி' பேரணியின் போது தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்ட காக்ரோச் ஜனதா கட்சித் தலைவர்களின் விடுதலை விவகாரம் தீவிரமடைந்துள்ளது. சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் இன்றுக்குள் விடுதலை செய்யப்படவில்லை என்றால், சட்டப்பூர்வமான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சி பகிரங்கமாக எச்சரித்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள CJP இணை-ஒருங்கிணைப்பாளர்களான சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோரின் ஐந்து நாள் நீதித்துறை காவல்காலம் இன்றுடன் முடிவடைவதாக இருந்தது. ஆனால், அவர்களை வேண்டுமென்றே சிறையிலேயே அடைத்து வைப்பதற்காக டெல்லி காவல் துறையும் அதிகாரிகளும் திட்டமிட்டு தாமதப்படுத்தும் உத்திகளைக் கையாள்வதாக காக்ரோச் ஜனதா கட்சி தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாட்டின் மூத்த வழக்கறிஞர் கபில் சிபலிடம் கலந்தாலோசனை நடத்தப்பட்டுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அபிஜித் திப்கே விடுதலை

இதனிடையே, இவ்வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனரான அபிஜித் திப்கே கடந்த நேற்று நிபந்தனைப் பிணையில் விடுவிக்கப்பட்டார். பிணையில் வெளியே வந்த பிறகு பேசிய அவர், டெல்லி காவல் துறையின் கைது நடைமுறைகளைக் கடுமையாக விமர்சித்தார். தங்களை நாள் முழுவதும் தடுத்து வைத்துவிட்டு, நள்ளிரவு 3:30 மணிக்கு திடீரென கைது ஆவணங்களுடன் வந்து நிற்பது டெல்லி போலீசாரின் விசித்திரமான வழக்கம் என்று அவர் சாடினார். மேலும், தனது தோழர்களை விரைவில் சுதந்திரக் காற்று சுவாசிக்க செய்வதற்காகக் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

CJP அமைப்பின் சட்ட விவகாரப் பிரிவுத் தலைவர் ரத்னா சிங் கூறுகையில், சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோரின் விடுதலைக்கான அனைத்து நடைமுறைகளும் முடிக்கப்பட்டுவிட்டதாகவும், தற்போது முறையான ஒப்புதலுக்காக மட்டுமே காத்திருப்பதாகவும் தெரிவித்தார். தேசியக் கொடியை ஏந்துவது எந்த வகையிலும் குற்றமாகாது என்றும், அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது பொதுமக்களின் உரிமை என்றும் அவர் கூறினார். இன்றுக்குள் இருவரும் விடுவிக்கப்படாவிட்டால் சட்டத்தின் முன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கை டெல்லி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல்: ஐபோன்களையும் வாசனைத் திரவியங்களையும் அள்ளி சென்ற ஈரானிய மீனவர்கள்!
ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்குக் கப்பல் விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியது.  இதையறிந்த அப்பகுதி மீனவர்கள் ஐபோன்களையும் வாசனைத் திரவியங்களையும் அள்ளிச் சென்றனர்.

ஈரானின் வளைகுடா கடற்கரைப் பகுதியான ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகில் கடந்த 14ஆம் தேதி அன்று சிங்கப்பூர் கொடியுடன் இயங்கிய 'ஜிஎஃப்எஸ் ப்ரைடு' என்ற மாபெரும் சரக்குக் கப்பல் விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியது. இந்த விபத்தின் காரணமாக இக்கப்பலில் கொண்டு செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான விலையுயர்ந்த பொருள்கள் கடலில் மிதந்தன.

இதையறிந்த அப்பகுதி மீனவர்களும் உள்ளூர் மக்களும் சிறிய மீன்பிடிப் படகுகளில் உடனடியாகக் கடலுக்குள் விரைந்து சென்று, நீரில் மிதந்த புத்தம் புதிய ஐபோன்கள், பிரெஞ்சு வாசனைத் திரவியங்கள் மற்றும் பல நுகர்வோர் பொருட்களை போட்டி போட்டுக்கொண்டு அள்ளிச் சென்றனர். இது தொடர்பான அதிர்ச்சியூட்டும் மற்றும் பரபரப்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன.

சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ காட்சிகளின்படி, நூற்றுக்கணக்கான மீனவர்கள் தங்களது சிறிய படகுகளில் கடல் அலைகளையும் பொருட்படுத்தாமல் பாதியளவு நீரில் மூழ்கியிருந்த சரக்குக் கண்டெய்னர்களுக்கு இடையே ஊடுருவிச் சென்றுள்ளனர். கடலில் தத்தளித்த பெட்டிகளை இளைஞர்கள் ஆர்வத்துடன் மீட்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

குறிப்பாக, ஒரு சிறிய மீன்பிடிப் படகு முழு அளவிலான பெரிய சரக்குக் கண்டெய்னர் ஒன்றை மிகுந்த சிரமத்துடன் கயிரிட்டுக் கட்டி இழுத்துச் செல்ல முயன்ற காட்சியும் அதில் இடம்பெற்றுள்ளது. "நாங்கள் ஹார்முஸ் ஜலசந்தியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்; ஒரு கன்டெய்னர் கப்பல் மூழ்கிவிட்டதாகத் தகவல் கிடைத்ததால் ஐபோன்களையும் வாசனைத் திரவியங்களையும் சேகரிக்கப் புறப்பட்டுள்ளோம்" என்று அந்தப் பகுதி மீனவர் ஒருவர் வீடியோவில் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூர் கடல்சார் துறை மற்றும் துறைமுக ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, இந்த விபத்து நேரிடுவதற்கு முன்பு கப்பலில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டதுடன், அடையாளம் தெரியாத ஏவுகணை அல்லது பொருள் தாக்கியதே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கப்பலில் பயணம் செய்த 21 மாலுமிகளும் உடனடியாகப் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மறுபுறம், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை கடற்படை தரப்பில் வேறுபட்ட விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, சம்பந்தப்பட்ட சரக்குக் கப்பல் பாதுகாப்பற்ற மற்றும் தடைசெய்யப்பட்ட ஒரு குறிப்பிட்ட வழித்தடத்திற்குள் நுழைந்ததால், அங்கு ஏற்கனவே கடலுக்கு அடியில் பதிக்கப்பட்டிருந்த கடல் கண்ணிவெடியில் மோதி விபத்துக்குள்ளானதாக அவர்கள் தெரிவித்தனர்.

2,500-க்கும் மேற்பட்ட கன்டெய்னர்களுடன் சென்று கொண்டிருந்த இந்த ஜிஎஃப்எஸ் ப்ரைடு கப்பல் விபத்துக்குள்ளானது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போர் சூழல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் அதனை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் கடந்த சில நாட்களாக தாறுமாறாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த அசாதாரண சூழலில் மீனவர்கள் நிவாரணப் பொருட்களைப் போல கடலில் மிதக்கும் பொருட்களை அள்ளிச் செல்வது ஒருபுறம் வேடிக்கையாகப் பார்க்கப்பட்டாலும், மறுபுறம் சர்வதேச வர்த்தகப் பாதைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதை இந்தச் சம்பவம் சுட்டிக்காட்டுகிறது. ஈரானிய ராணுவ தரப்பு இப்பகுதியில் செல்லும் கப்பல்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், தங்களால் பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பு வழித்தடங்களைப் பின்பற்றுமாறும் தொடர்ந்து அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை: இன்றைய நிலவரம்
ஈரான் போர் ஓய்ந்து ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டு மத்திய கிழக்கில் இருந்து கச்சா எண்ணெய் வரத்து அதிகரித்த ஒரு சில நாட்களில் மீண்டும் போர் மூண்டுள்ளதால் சர்வதேச கச்சா எண்ணெய் விலைகளில் மீண்டும் தாக்கம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

இந்நிலையில், இன்றைய (18.10.2026 - ஞாயிற்றுக்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.

இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.99.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

திருப்பதியை போன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் வசதிகள் ஏற்பாடு: முதலமைச்சர் வி.டி.சதீசன்
கேரளம் முதலமைச்சர் வி.டி.சதீசன் நேற்று சபரிமலை ஐயப்பன் கோவிலுல் வழிபாடு செய்த நிலையில், சபரிமலை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு திருப்பதி கோவிலில் பின்பற்றப்படும் வசதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு முதலமைச்சர் வி.டி.சதீசன் நேற்று சென்று வழிபாடு செய்தார்.

கேரளத்தில் பெய்து வரும் கனமழையையும் பொருட்படுத்தாமல், ஐயப்ப பக்தர்கள் வழக்கமாக அணியும் கருப்பு உடையை அணிந்து முதலமைச்சர் கோவிலுக்கு சென்றார்.

மலையாள மாதமான துலாம் பூஜைகளுக்காக ஐயப்பன் கோவில் திறக்கப்பட்டதை அடுத்து பக்தர்களின் கூட்டம் அலை மோதியது.

இதையடுத்து நவம்பர் 17-ஆம் தேதி தொடங்கவிருக்கும் மண்டலம் மகரவிளக்கு புனித யாத்திரைக்கான ஏற்பாடுகளையும் சதீசன் ஆய்வு செய்தார்.

திருப்பதி மாதிரியை போன்று ஐயப்பன் கோவில்

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்த்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சபரிமலை பக்தர்களுக்கு பாதுகாப்பான மற்றும் அமைதியான புனித யாத்திரையை உறுதி செய்வது கேரள அரசின் உத்தரவாதமாகும்.

ஐயப்ப சுவாமியின் இருப்பிடத்திற்கு வரும் பக்தர்களுக்காக மாநில அரசு விரிவான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பொதுப் பணிகளை முடிப்பது மற்றும் கழிவு மேலாண்மைக்கான செயல் திட்டத்தை வகுப்பது ஆகியவை இதில் அடங்கும்.

சபரிமலையை நாட்டின் சிறந்த புனித யாத்திரைத் தலங்களில் ஒன்றாக மாற்றுவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.

தற்போதைய புனித யாத்திரை காலத்திற்குப் பிறகு, திருப்பதி மாதிரியை பின்பற்றி சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு வசதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படும்” என பதிவிட்டுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் கோர விபத்து: பக்தர்கள் மீது லாரி மோதி 12 பேர் பலி
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க ஷீத்லா மாதா கோயில் அருகே நவாராத்திரி விழாவை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய திரண்டிருந்த பக்தர்கள் மீது கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று புகுந்த விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

குவாலியர் மாவட்டம் சினோர் பகுதியில் இருந்து நெல் பாரம் ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று, அப்பகுதியில் உள்ள செங்குத்தான சரிவுப் பாதையில் வந்து கொண்டிருந்தது. இப்பகுதியில் கனரக வாகனங்கள் இயக்கப்படுவதற்கு கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு சுமார் 1:30 மணி அளவில் வந்து கொண்டிருந்த அந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் வைக்கப்பட்டிருந்த காவல்துறையின் தடுப்புச் சுவர்களையும், சோதனைச் சாவடியையும் அடித்து நொறுக்கிக் கொண்டு சாலையில் நின்றுகொண்டிருந்த பக்தர்கள் மீது வேகமாக மோதியது. அதுமட்டுமின்றி, அருகில் இருந்த கோயிலின் வெளிப்புற சுவர் மற்றும் பிரதான வாயில் மீதும் மோதி நின்றது.

இந்த விபத்து குறித்து குவாலியர் மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளர் தர்மவீர் சிங் தெரிவிக்கையில், நவாராத்திரி பண்டிகையை ஒட்டி ஷீத்லா மாதா கோயிலில் பெருமளவில் பக்தர்கள் திரண்டிருந்த வேளையில் இந்த அசம்பாவிதம் அரங்கேறியுள்ளது என்றார். விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் உடனடியாக அவசர ஊர்திகள் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு மீட்டுச் சென்றனர்.

ஒட்டுமொத்தமாக 39 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி 12 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 5 முதல் 6 பேரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், மீதமுள்ளவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த விபத்தின் போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு காவலர்களும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்துக்கான காரணம் குறித்து குவாலியர் மாவட்ட ஆட்சியர் ருச்சிகா சவுகான் கூறுகையில், நவாராத்திரி திருவிழாவை முன்னிட்டு அப்பகுதியில் சிறப்புப் போலீஸ் சோதனைச் சாவடிகளும் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தடை செய்யப்பட்ட அந்தப் பாதைக்குள் கனரக லாரிக்குள் எப்படி நுழைந்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்தார். மேலும், லாரியில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு அல்லது பிரேக் ஃபெயில் காரணமா என்பதை கண்டறிய வட்டாரப் போக்குவரத்து அலுவலக தொழில்நுட்பக் குழுவினர் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவிழா கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த இந்த பேரிடர் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ரூ. 270 கோடி போதைப்பொருள் கடத்த முயன்ற வழக்கு: 2 பெண் போலீசார் உள்பட 3 பேரிடம் தீவிர விசாரணை
நாகையில் இருந்து இலங்கைக்கு ரூ. 270 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்த முயன்ற வழக்கில் 2 பெண் போலீசார் உள்பட 3 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ரகசிய தகவல்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பகுதியில் இருந்து இலங்கைக்கு மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருள் கடத்தப்படுவதாக, மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரக (திருச்சி மண்டலம்) அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு வேளாங்கண்ணியில் விடுதி நடத்தி வரும் பிரதாபராமபுரம் பகுதியைச் சேர்ந்த சுகநாதன் (வயது 27) என்பவர் வீட்டுக்கு, மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் 16 பேர் கொண்ட குழுவினர் சென்று சோதனை செய்தனர்.

ரூ.270 கோடி போதைப்பொருள் பறிமுதல்

இந்த சோதனையில் சுகநாதன் வீட்டில் இலங்கைக்கு கடத்துவதற்காக தலா 5 கிலோ அடங்கிய 27 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 135 கிலோ மெத்தபெட்டமைன் எனப்படும் உயர்ரக போதைப்பொருளைப் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ. 270 கோடிக்கும் மேல் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

த.வெ.க. பிரமுகர்

இதைத்தொடர்ந்து நடந்த விசாரணையில், போதைப்பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது வேளாங்கண்ணியை அடுத்த கீழையூர் ஊராட்சி ஒன்றியம், சிந்தாமணி ஊராட்சியைச் சேர்ந்த த.வெ.க. மாவட்ட செயற்குழு உறுப்பினரும், வக்கீலுமான பூபாலன் (42) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் ஒரு குழுவினர் பூபாலன் வீட்டுக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர்.

4 பேர் கைது

அப்போது நடத்திய விசாரணையில் பூபாலன், சுகநாதன் உள்ளிட்டோர் இலங்கைக்கு போதைப்பொருட்களை கடத்தி வந்ததும், இதற்கு சுகநாதனின் விடுதியில் மேலாளராகப் பணிபுரிந்து வந்த மணிகண்டன் (29), நண்பர் சதீஷ் (30) ஆகியோர் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து த.வெ.க. பிரமுகர் பூபாலன், சுகநாதன், மணிகண்டன், சதீஷ் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

கைதான 4 பேரிடமும் இரவு முழுவதும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. நேற்றும் 2-வது நாளாக அவர்களிடம் விசாரணை நீடித்தது. 135 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது. இதில் யார், யாருக்கு தொடர்பு உள்ளது? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

2 பெண் போலீசாரிடம் விசாரணை

இதில் த.வெ.க. நிர்வாகி பூபாலன், விடுதி உரிமையாளர் சுகநாதன் ஆகியோருடன் செல்போனில் தொடர்பில் இருந்த 2 பெண் போலீசார் உள்பட 3 பேரிடமும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதேபோல் கைதான பூபாலனிடம், போலீஸ் உயர் அதிகாரி ஒருவரும் வாட்ஸ்அப் மூலமாக தொடர்பு கொண்டதாகத் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இனி கூடுதல் விலை இல்லை: 137 உயிர்காக்கும் புற்றுநோய் மருந்துகளுக்கு 30% லாப வரம்பு நிர்ணயம்- 70% வரை விலை குறைய வாய்ப்பு!
137 புற்றுநோய் மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையில், 30 சதவீதத்துக்கு மேல் லாபம் பெறக் கூடாது என்று மத்திய அரசு வரம்பு விதித்துள்ளது.

மத்திய அரசின் ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம், விலை கட்டுப்பாட்டின் கீழ் வராத 137 அத்தியாவசிய புற்றுநோய் மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையில் 30 சதவீதத்திற்கு மேல் லாபம் பெறக் கூடாது என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் புற்றுநோய் மருந்துகளின் விலை 70 சதவீதம் வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விலை குறைப்புக்குக் காரணம் என்ன?

புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் சில வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு மருந்துகளின் உற்பத்தி விலைக்கும், விற்கப்படும் விலைக்கும் இடையே பல மடங்கு கூடுதல் லாபம் வைக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இதனால் நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் தாங்க முடியாத பொருளாதாரச் சுமையைச் சந்தித்து வந்தனர். இதைக் கட்டுப்படுத்தவும், புற்றுநோய் சிகிச்சையை ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கும் எளிதாக்கவும், விலை நிர்ணய வரம்பை மீறி கொள்ளை லாபம் அடிப்பதைத் தடுக்கவும் மத்திய அரசு இந்த சீர்திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளது.

சுகாதாரப் பணிகள் தலைமை இயக்குநரகத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளைச் சேர்ந்த முன்னணி புற்றுநோய் நிபுணர்கள், மருத்துவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளைக் கொண்ட சிறப்புக் குழு பரிந்துரைத்த பட்டியலின் அடிப்படையில்தான் இந்த 137 மருந்துகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த மருந்துகளின் விற்பனை லாபம் அதிகபட்சம் 30 சதவீதத்திற்குள் மட்டுமே இருக்க வேண்டும். இதனால் குறிப்பிட்ட சில மருந்துகளின் விலை 70 சதவீதம் வரை அதிரடியாகக் குறைய வாய்ப்புள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பெறும் மருந்துகளின் விவரங்கள் தேவைக்கேற்ப அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்படும்.

எப்போது முதல் அமலுக்கு வருகிறது?

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அரசிதழ் அறிவிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 7 நாட்களுக்குள் அனைத்து மருந்து உற்பத்தி நிறுவனங்களும் தாங்கள் திருத்தியமைத்த புதிய விலை விவரங்களை என்பிபிஏ அமைப்புக்குத் தெரிவிக்க வேண்டும். மாற்றப்பட்ட புதிய மற்றும் குறைந்த விலைகள் வரும் நவம்பர் 9-ஆம் தேதி முதல் கட்டாயமாக அமலுக்கு வரும்.

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தங்களது திருத்தப்பட்ட விலை பட்டியலைத் தங்களது அதிகாரப்பூர்வ வலைதளங்களில் வெளியிட வேண்டும். மேலும், அனைத்து சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கும் இதைப் பரவலாக விநியோகிக்க வேண்டும். சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள் தாங்கள் விற்கும் மருந்துகளின் புதிய விலையை அனைவரும் பார்க்கும் வகையில் தெளிவாகக் காட்சிப்படுத்த வேண்டும். நுகர்வோர்கள் மருந்தின் விலையை 'Pharma Sahi Daam' செயலி மூலமாகவும், என்பிபிஏ அதிகாரப்பூர்வ வலைதளம் வழியாகவும் எளிதாகச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

பெரும்பாலான புற்றுநோய் மருந்துகள் நேரடியாக மருத்துவமனைகள் மூலமாகவே நோயாளிகளுக்கு வழங்கப்படுவதால், நவம்பர் 9 முதல் குறைந்த விலையிலேயே மருந்துகள் வழங்கப்படுவதை மருத்துவமனைகள் உறுதி செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாநில மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் இந்த உத்தரவு முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதைத் தீவிரமாகக் கண்காணித்துத் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கில் செலவு செய்துவரும் கோடிக்கணக்கான குடும்பங்களுக்குப் பெரிய நிம்மதி கிடைத்துள்ளது.

100 சதவீத அபராத வரி ரத்து: டிரம்ப் உத்தரவால் இந்தியாவுக்கு நிம்மதி..!
இந்தியாவுக்கு விதிக்கவிருந்த 100 சதவீத அபராத வரியை ரத்து செய்து அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார். இதனால் ரூ.11.30 லட்சம் கோடி வர்த்தகம் முடக்கம் ஏற்படாமல் தப்பியது.

இந்தியா ஒரு வரி விதிப்பு அரசன்

டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் இருந்தே, அமெரிக்காவிற்கு சாதகமான அமெரிக்கா முதலில் என்ற வரிக்கொள்கையை தீவிரமாகப் பின்பற்றி வருகிறார். குறிப்பாக, இந்தியாவை ஒரு வரி விதிப்பு அரசன் என்று டிரம்ப் பலமுறை பகிரங்கமாக விமர்சித்துள்ளார். அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாகக் கூறி, இந்தியாவிற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு வர்த்தக அந் தஸ்தை டிரம்ப் அரசு ரத்து செய்தது.

இதற்கு பதிலடியாக இந்தியாவும் அமெரிக்காவின் 28 பொருட்கள் மீது கூடுதல் வரி விதித்தது. கடந்த 2025-ம் ஆண்டு டிரம்ப் மீண்டும் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகும், இந்தியப் பொருட்கள் மீது பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று எச்சரித்து, இரு நாடுகளுக்கும் இடையே ஒரு மறைமுக வர்த்தகப் போரை நீட்டிக் கச் செய்தார்.

100 சதவீதம் வரி

உக்ரைன் போருக்குப் பிறகும் ரஷியாவிடமிருந்து இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் மலிவு விலையில் கச்சா எண்ணெயைத் தொடர்ந்து வாங்கியது அமெரிக்க நாடாளுமன்றத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ரஷியாவின் வருவாயை முற்றிலும் முடக்க ஒரு கடுமையான சட்ட வரைவு முன்மொழியப்பட்டது. அதன்படி ரஷியா மற்றும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் அமெரிக்காவிற்கு அனுப்பும் அனைத்துப் பொருட்கள் மீதும் 500 சதவீத அபராத வரி விதிக்கப்படும் என முன்மொழியப்பட்டது.

இது உலக வர்த்தகத்தையே முடக்கும் அளவுக்குக் கடுமையானதாக இருந்தது. இந்த வரி விதிப்பு அமெரிக்காவின் சொந்தப் பொருளாதாரத்தையும், அதன் நட்பு நாடுகளையும் கடுமையாகப் பாதிக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்தனர். இதனால், நாடாளுமன்ற விவாதங்களுக்குப் பிறகு இந்தச் சட்டம் திருத்தப்பட்டது. அதன்படி, கடந்த 18-ந்தேதி டிரம்ப் இதில் கையெழுத்திட்டபோது, ரஷிய எண்ணெயை வாங்கும் இந்தியா உள்பட 5 நாடுகள் மீது 100 சதவீதம் வரிவிதிக்கப்பட்டது.

டிரம்ப் விலக்கு

இந்த சட்டமானது இன்று முதல் அமலுக்கு வருவதாக இருந்தது. அமெரிக்காவின் இந்த கடுமையான வரிவிதிப்பு காரணமாக இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்குச் செல்லும் ரூ.11.39 லட்சம் கோடி (120 பில்லியன் டாலர்) மதிப்பிலான ஏற்றுமதி வர்த்தகம் முற்றிலும் முடங்கி, லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டது. இந்தநிலையில் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது அமெரிக்கா விதிக்கவிருந்த கடுமையான வர்த்தகக் கட்டண அச்சுறுத்தலில் இருந்து டிரம்ப் விலக்கு அளித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதற்கான காலக்கெடு முடிவடைய சில மணி நேரங்களே இருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது. அமெரிக்காவில் டீசல் விலையைக் கட்டுப்படுத்தவும், வரவிருக்கும் இடைத்தேர்தலைச் சந்திக்கவும் டிரம்ப் இந்த அவசர வர்த்தக விலக்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இந்த அதிரடி உத்தரவு மூலம் அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகளில் இருந்து இந்தியா தப்பியுள்ளது.

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 18.10.2026- இல்லம் தேடி நல்ல செய்தி வந்து சேரும்
மேஷம்

தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்களால் நன்மை உண்டு.

ரிஷபம்

சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். அருகிலுள்ளவர்களின் ஆதரவு குறையலாம். சில பிரச்சினைகளுக்கு முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள்.

மிதுனம்

மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. வரவை விடச் செலவு கூடும். பயணங்களை மாற்றியமைப்பீர்கள்.

கடகம்

சேமிப்பு அதிகரிக்கும் நாள். தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும். ஆடை, ஆபரணங்களை வாங்குவதில் ஆர்வம் ஏற்படும்.

சிம்மம்

மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். வருமானம் திருப்தி தரும். தொல்லை கொடுத்தவர்கள் தோள் கொடுத்து உதவுவர். தடைப்பட்ட காரியங்கள் துரிதமாக நடைபெறும்.

கன்னி

வரன்கள் வாயில் தேடி வரும் நாள். வருமானம் திருப்தி தரும். தொழில் முன்னேற்றம் கருதி பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.

துலாம்

எதிரிகள் உதிரியாகும் நாள். இல்லம் தேடி நல்ல செய்தி வந்து சேரும். இடம் வாங்கும் முயற்சி கைகூடும். ஆரோக்கியத்திற்காக சிறு தொகையைச் செலவிடுவீர்கள்.

விருச்சிகம்

வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். பிரபலஸ்தர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருப்பர். வருமானம் உயரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.

தனுசு

பணவரவு திருப்தி தரும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பெரிய மனிதர்களின் தொடர்பால் பெருமைகள் வந்து சேரும்.

மகரம்

நினைத்தது நிறைவேறும் நாள். நீடித்த நோய் அகலும். இடம், பூமி வாங்கும் எண்ணம் நிறைவேறும். மாற்றினத்தவர்கள் ஒத்துழைப்புக் கிடைக்கும்.

கும்பம்

தொட்ட காரியங்கள் வெற்றி பெறும் நாள். நண்பர்கள் சரியான நேரத்தில் கைகொடுத்து உதவுவர். உத்தியோகத்தில் சக பணியா ளர்களின் ஆதரவு கிடைக்கும்.

மீனம்

யோகமான நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். தேவைகளைப் பூர்த்தி செய்ய நண்பர்கள் முன்வருவர்.

சென்னையில் வெள்ள அபாயம் குறித்து பீதியடைய வேண்டாம் - அவசர உதவி எண் சேவை ஏற்பாடு: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியுள்ள நிலையில், தவெக அமைச்சர்களான ஆதவ் அர்ஜுனா மற்றும் டி. லோகேஷ் தமிழ்செல்வன் ஆகியோர் வடக்கு மற்றும் தெற்கு சென்னையில் மழைநீர் வடிகால் (SWD) பணிகள், கால்வாய் தூர்வாரும் பணிகள் மற்றும் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர்.

தவெக அமைச்சர்கள் ஆய்வு

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் உள்ள 200 அடி சாலையின் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு செய்தார்.

நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்படும் 16 சிறிய கால்வாய்கள் வழியாக, சதுப்பு நிலத்திலிருந்து வரும் மழைநீர் தடையின்றி செல்வதை அமைச்சர் ஆதவ் ஆய்வு செய்தார்.

இதற்கிடையில், வணிக வரித் துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன், ஓட்டேரியில் உள்ள ஏஏ சாலை மற்றும் கணேசபுரம் சுரங்கப்பாதையில் நடைபெற்று வரும் திடக்கழிவுத் துறைப் பணிகளை ஆய்வு செய்தார்.

வெள்ள தடுப்பு பணிகள் ஆய்வு

மேலும், வியாசர்பாடி சந்திப்பு மற்றும் முல்லை நகரில் உள்ள சேகரிப்புத் தொட்டிகளில் இருந்து மழைநீரை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளையும் அவர் ஆய்வு செய்தார்.

மழைநீர் தடையின்றி செல்வதை உறுதி செய்வதற்காக, கேப்டன் காட்டன் கால்வாய் மற்றும் கொடுங்கையூர் தெற்குக் கால்வாயில் மேற்கொள்ளப்படும் வெள்ளத் தடுப்புப் பணிகளையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.

கனமழையின் போது தாழ்வான பகுதிகளில் நீர் தேங்குவது குறித்த கவலைகளுக்கு மத்தியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெள்ள நிவாரண மையங்கள்

வெள்ள நிவாரண மையங்களும் சமையலறைகளும் தேவையான வசதிகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தாழ்வான பகுதிகளில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவதற்காக மோட்டார் பம்புகள் நிறுவப்பட்டு வருவதாகவும் பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மேலும், நிலுவையில் உள்ள பணிகளை விரைவுபடுத்தவும், மழைநீர் தடையின்றி செல்வதை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு அவர்கள் உத்தரவிட்டனர்.

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

இதுகுறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், மிகுந்த கவனத்துடன் இருக்கும்படியும் தெரிவித்துள்ளார்.

மேலும் பொதுமக்கள் 24 மணி நேரமும் செயல்படும் அரசு உதவி எண் 1913-ஐ தொடர்பு கொள்ளும்படியும் கூறியுள்ளார்.

சென்னையை மிரட்டிய கனமழை - தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று (ஞாயிறு) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை, தமிழ்நாட்டில் தொடங்கி பரவலாக பெய்து வருகிறது.

தமிழ்நாட்டில் கடந்த 2 தினங்களாக அதிக இடங்களில் மழை பொழிகிறது. இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு முழுவதும் பல இடங்களில் கனமழை பெய்தது.

சென்னையில் குறிப்பாக வடசென்னை பகுதிகளில் மழையின் தீவிரம் சற்று அதிகமாக இருந்தது.

தமிழ்நாடு வெதர்மேன்

மேகவெடிப்பின் காரணமாக சில பகுதிகளில் கனமழையும் கொட்டித்தீர்த்ததாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தன்னுடைய 'எக்ஸ்' தள பக்கத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

சுமார் 20 முதல் 30 சதுர மீட்டர் பரப்பளவுக்குள், ஒரு மணி நேரத்தில் 10 சென்டி மீட்டருக்கும் அதிகமாக மழை பொழிந்தால் அதை மேக வெடிப்பினால் ஏற்படும் மழை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.

அந்த வகையில் நேற்று வடசென்னைக்கு உட்பட்ட கார்கில் நகரில் 10.9 செ.மீட்டரும், மற்றும் திருவள்ளூர் மாவட்டம் மெப்பேடு பகுதியில் 10 செ.மீ. மழையும் கொட்டியது.

இதனால் இந்த பகுதிகளில் எல்லாம் மழைநீர் ஆறுபோல ஓடியது. சில தெருக்களில், தாழ்வான பகுதிகளில் குளம்போல மழைநீர் தேங்கியதை பார்க்க முடிந்தது.

இதற்கிடையே இனி வரும் நாட்களிலும் பருவமழை தீவிரம் அடையும் என தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

அதன்படி, வடகிழக்கு பருவமழையின் தொடக்கம் மற்றும் முதல் சுற்று மழை வருகிற 25-ந் தேதி வரை தமிழ்நாட்டில் பரவலாக பெய்யக்கூடும் என்று அவர் கூறினார்.

அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் நீடிக்கும் காற்று சுழற்சியால் நாளை (திங்கட்கிழமை) வரை பகலில் வெயில் அடித்தாலும் மாலை, இரவு, நள்ளிரவு நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பதிவாகும் என்றும்,

அந்த காற்று சுழற்சி 20-ந்தேதி தமிழ்நாட்டின் கடற்கரை பகுதியில் மையம் கொண்டு, வலுவான காற்று சுழற்சியாகவோ, காற்றழுத்த தாழ்வு பகுதியாகவோ வலுபெற வாய்ப்பு இருக்கிறது என்றும்,

அதன் காரணமாக வருகிற 21, 22 மற்றும் 23-ந்தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் மழையை தீவிரப்படுத்தும் என்றும் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

இதில் 21, 22-ந் தேதிகளில் வடகடலோரம் டெல்டாவில் கன முதல் மிக கனமழை வரை கொட்டக்கூடும் எனவும், இந்த நாட்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடும் அளவுக்கான சூழல் ஏற்படும் எனவும் அவர் கூறினார்.

பின்னர் இந்த நிகழ்வு, 23-ந் தேதி தமிழ்நாட்டின் வழியாக நகர்ந்து கேரளாவையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் வருகிற 25-ந் தேதி வரை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின் முதல் சுற்று தீவிரம் அடைந்து காணப்படும் என்றே சொல்லப்படுகிறது.

சென்னையில் நேற்றிரவு 7 மணி முதல் 10.30 மணி வரையிலான 3 மணி நேரத்தில் பாரிமுனையில் 26.83 செ.மீட்டரும், திருவொற்றியூர் மண்டலத்துக்குட்பட்ட கத்திவாக்கம் பகுதியில் 26.4 செ.மீட்டரும், சாத்தாங்காடு பகுதியில் 22.2 செ.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

திருவொற்றியூர், கார்கில் நகர், எண்ணூர், தண்டையார்ப்பேட்டை போன்ற வடசென்னை பகுதியில் அதிக மழை பெய்துள்ளது.

போர் நிறுத்தத்தின் பின் காசாவில் 340 குழந்தைகளை கொன்று குவித்த இஸ்ரேல் - UNICEF கவலை
போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதிலிருந்து காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 340க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதிலிருந்து காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய  தாக்குதல்களில் 340க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் ஐநாவின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.

இந்த புள்ளிவிவரம் போர்நிறுத்தத்திற்கு முரணானவை என்று யுனிசெப் செய்தித் தொடர்பாளர் ரிக்கார்டோ பிரஸ் கூறினார்.

கடந்த 2 வாரங்களில் மட்டும் காசாவில் நடந்த வான்வழி தாக்குதல்களில் 5 சிறுவர்களும் 2 சிறுமிகளும் கொல்லப்பட்டதோடு, குறைந்தது 33 குழந்தைகள் படுகாயமடைந்துள்ளனர்.

முன்னதாக காயங்களுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 சிறுவர்களும் உயிரிழந்ததாக பைரஸ் கூறினார்.

போரின் விளைவுகள்

போரின் விளைவுகள் காசாவில் உள்ள குழந்தைகளின் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பாதித்து வருவதாக அவர் மேலும் கூறினார்.

அவர்களின் இருப்பிடம் முதல் உணவு மற்றும் கல்வி வரை அனைத்தும் நெருக்கடியில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

8 லட்சம் குழந்தைகள்

அக்டோபர் 2023ல் மோதல் தொடங்கியதிலிருந்து, காசாவில் கிட்டத்தட்ட 8 லட்சம் குழந்தைகள் இடம்பெயர்ந்துள்ளனர்.

அவர்களில் பெரும்பாலோர் முகாம்களிலோ அல்லது அபாயகரமாக சேதமடைந்த கட்டிடங்களிலோ வசித்து வருகின்றனர்.

60,000 குழந்தைகள்

கிட்டத்தட்ட 60,000 குழந்தைகள் போரினால் தங்கள் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ இழந்துள்ளனர்.

மேலும், அவர்களில் ஏறக்குறைய அனைவருக்கும் ஏதேனும் ஒரு வகையான மனநல ஆதரவு தேவைப்படுகிறது என அவர் தெரிவித்தார்.

பின் இந்த எச்சரிக்கை, காசாவில் குளிர்காலம் வரவிருக்கும் நிலையில் யுனிசெப் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

பொய் மூட்டைகள்.. "இந்தியாவில் இளைஞர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்" என்ற அறிக்கைக்கு ஐ.நா.வில் இந்தியா கண்டனம்
ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் தயாரித்த அறிக்கையை இந்தியா வன்மையாகக் கண்டித்துள்ளது.

மனநலம் மற்றும் பாலின சமத்துவம் போன்ற பிரச்சனைகள் குறித்துப் பேசினால், நாட்டில் உள்ள இளைஞர்கள் பழிவாங்கல் அல்லது துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்று ஐநா சிறப்பு அறிக்கையாளர் ஜினா ரொமேரோ கூறியுள்ள குற்றச்சாட்டுகளை இந்தியா வன்மையாகக் கண்டித்துள்ளது.

இந்த அறிக்கை ஆதாரமற்ற மற்றும் பெயர் குறிப்பிடப்படாத கூற்றுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது என்றும், இது வதந்திகளை மூடிமறைக்கும் ஒரு வெறும் போர்வை என்றும் கூறி, இந்தியா அதனை வன்மையாக விமர்சித்துள்ளது.

ஐநாபொதுச் சபையின் மூன்றாவது குழு கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து இந்தியா தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்

ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் அனுஜ் ஸ்வரூப் கூறுகையில், "உலகிலேயே அதிக இளைஞர் மக்கள்தொகையைக் கொண்ட ஒரு நாட்டிற்கு எதிராக இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது சரியல்ல.

பெயர் குறிப்பிடப்படாத நபர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இது ஒரு அறிக்கை வடிவில் உள்ள வெற்று வதந்திகளின் பொய் மூட்டையாகும்.

இந்தியத் தூதுக்குழு இதை முழுமையாக நிராகரிக்கிறது" என்றார்.

இதுபோன்ற ஒருதலைப்பட்சமான மற்றும் பொறுப்பற்ற அறிக்கைகள் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் நிறுவனங்களின் நம்பகத்தன்மையை கடுமையாக சேதப்படுத்தும் என்று அவர் கவலை தெரிவித்தார்.

இந்தியாவின் ஜனநாயகம்

மேலும் இந்தியாவின் ஜனநாயகம் குறித்து பேசிய அவர், "அமைதியான முறையில் கூடும் சுதந்திரம், சங்கங்கள் அமைக்கும் உரிமை, பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியவை இந்திய அரசியலமைப்பின் 19வது பிரிவின் கீழ் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகள்" என்று தெரிவித்தார்.

சுதந்திரமான நீதித்துறை, சுதந்திரமான ஊடகங்கள் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் போன்ற நிறுவனங்கள் இந்த உரிமைகளுக்கு பாதுகாப்பாக நிற்கின்றன என்று அவர் கூறினார்.

ஆக்கப்பூர்வமாக பதில்

கடந்த ஜூன், ஜூலை மாதம் தேர்வுகளில் நடந்த முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது, ​​அரசு மிகவும் ஆக்கப்பூர்வமாகப் பதிலளித்ததாகவும் அவர் கூறினார்.

எனவே பெயர் தெரியாத ஒருவரின் வார்த்தைகளின் அடிப்படையில் 140 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டைப் பற்றிப் பொதுமைப்படுத்துவது பொருத்தமற்றது என்றும், இது ஐ.நா. பிரதிநிதிக்குத் தகாத செயல் என்றும் அவர் கூறினார்.

அறிக்கைகளை தயாரிக்கும்போது நடுநிலைமையை பின்பற்ற வேண்டும் என்று அவர் அறிவுரை கூறினார்.

ஐதராபாத்: கல்லூரியில் தாண்டியா நிகழ்ச்சியின்போது விபத்து.. மாணவி பலி - 14 பேர் படுகாயம்
ஐதராபாத்தில் பொறியியல் கல்லூரியில் தாண்டியா நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட விபத்தில் மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நாடர்குல்லில் உள்ள எம்.வி.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியில் இந்த விபத்து நிகழ்ந்தது.

தசராவை முன்னிட்டு இரவில் தாண்டியா நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தபோது விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இரும்பு வளைவு ஒன்று சரிந்து விழுந்தது.

உயிரிழப்பு

இந்த விபத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 14 பேர் காயமடைந்தனர்.

உயிரிழந்தவர், வனபர்த்தியைச் சேர்ந்த சோனி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கவலைக்கிடம்

சோனியின் சகோதரியும் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். மேலும் காயமடைந்தவர்களில் மேலும் ஐந்து பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

அவர்கள் சிகிச்சைக்காக எல்.பி. நகரில் உள்ள காமினேனி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

"நிதிஷ் குமாருக்காக 9 பேரை கொன்றேன்.." பேச்சு சர்ச்சை ஆனதால் பிளேட்டை மாற்றிய ஜே.டி.யு. எம்எல்ஏ
பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அனந்த் குமார் சிங் தெரிவித்த கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஐக்கிய ஜனதா தள (JDU) தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான  நிதிஷ் குமாரின் அரசியல் ஆதாயத்திற்காக தான் ஒன்பது பேரைக் கொன்றதாக கூறி அனந்த் குமார் சிங் பரபரப்பை ஏற்படுத்தினார்.

பின்னர் சில மணி நேரங்களிலேயே தனது வார்த்தைகளை அவர் மாற்றிக்கொண்டார். இது சர்ச்சையாகி உள்ளது.

சர்ச்சை கருத்து

அண்மையில் நடந்த நிகழ்வொன்றில் பேசிய அனந்த் சிங், "எனக்கு நிதீஷ் குமாருடன் நீண்டகால தொடர்பு உண்டு. அவர் கடினமான காலங்களில் இருந்தபோது நான் அவருக்குத் துணையாக நின்றேன். அவருக்காக நான் 9 பேரைக் கொன்றேன்" என்று கூறினார்.

பீகாரில் Patna Graduates தொகுதிக்கு நடைபெற உள்ள சட்ட மேலவை தேர்தலில், தனது அரசியல் போட்டியாளரான நீரஜ் குமாருக்கு கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கியதற்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியபோது இந்த கருத்தை அவர் தெரிவித்தார்.

பின்வாங்கல்

இந்தக் கருத்துக்கள் அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அனந்த் சிங் தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கினார்.

தனது வார்த்தைகள் திரித்துக் கூறப்பட்டதாகக் கூறி, சில மணி நேரம் கழித்து அளித்த விளக்கத்தில், லாலு பிரசாத் யாதவின் ஆட்சிக்காலத்தில் தனது ஒன்பது ஆதரவாளர்கள் கொல்லப்பட்டதாகவும், தன் மீதும் ஒரு கொலை முயற்சி நடந்ததாகவுமே தான் கூற வந்தததாக தெரிவித்தார்.

நிதிஷ் குமாரை ஆதரித்ததாலேயே லாலுவின் பிரிவு இந்தக் கொடூரங்களைச் செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

விமர்சனம்

அனந்த் சிங்கின் கருத்துக்களுக்கு ஐக்கிய ஜனதா தள கட்சி தேசிய செய்தித் தொடர்பாளர் ராஜீவ் ரஞ்சன் பிரசாத் பதிலளிக்கையில், இந்தக் கருத்துக்கள் தேவையற்றவை என்றும் நிதிஷ் குமாரின் அரசியல் வாழ்க்கை களங்கமற்றது என்றும் தெரிவித்தார்.

மறுபுறம், எதிர்க்கட்சியான லாலுவின் ஆர்ஜேடி, குற்றப் பின்னணி கொண்டவர்களுடன் கைகோர்த்ததற்காக நிதிஷ் குமாரை விமர்சித்துள்ளது. அரசியல் கொலைகளை வெளிப்படையாக அவர்கள் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளது.

விஜய் சேதுபதியின் 'ஸ்லம்டாக்' படப்பிடிப்பு நிறைவு
விஜய் சேதுபதியின் ஸ்லம்டாக் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் பான் இந்தியா திரைப்படமான 'ஸ்லம்டாக் - 33 டெம்பிள் ரோடு' படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்துவிட்டதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகந்நாத் இப்படத்தை இயக்கியுள்ளார்.

பூரி ஜெகந்நாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோர் பூரி கனெக்ட்ஸ் மற்றும் ஜேபி மோஷன் பிக்சர்ஸ் பேனரின் கீழ் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

படக்குழு

உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆக்ஷன் என்டர்டெய்னரில் விஜய் சேதுபதி ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மூத்த நடிகைகள் தபு, ஜரினா வஹாப் மற்றும் சம்யுக்தா மேனன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

அண்மையில் படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்தது.

படப்பிடிப்பு நிறைவு

படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்துவிட்டதாகவும், திரையரங்குகளில் ரசிகர்களை உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்த்தத் தயாராக இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

படத்தின் பின்னணிப் பணிகள் தற்போது அதிவேகமாக நடைபெற்று வருவதாகவும், படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வங்கதேசம்: ரிசார்ட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் உடல் கருகி பலி
வங்கதேசத்தில் ரிசார்ட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்

வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் மாவட்டத்தில் உள்ள கடற்கரையோர ரிசார்ட் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் 9 பேர் காயமடைந்தனர்.

எரிந்து நாசம்

இனானியில், மரைன் டிரைவில் உள்ள படுவார்டெக் கடற்கரைக்கு அருகே அமைந்துள்ள மூன்று மாடிகளைக் கொண்ட அந்த ரிசார்ட்டில் நேற்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. மூங்கில் மற்றும் மரத்தால் கட்டப்பட்டிருந்த அந்த ரிசார்ட் முற்றிலுமாக எரிந்து நாசமானது.

தீ விபத்து ஏற்பட்டபோது அந்த ரிசார்ட்டில் சுமார் 30 பேர் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்களில், நான்கு அல்லது ஐந்து பேர் தப்பித்துவிட்டனர். ஆனால் 10 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த 10 பேரில் குழந்தைகளும் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tragic Fire in Cox’s Bazar!

A devastating fire at Top Top Resort on Marine Drive reportedly claimed seven lives, with several others missing. Rescue efforts and investigations continue. Heartfelt condolences to the victims’ families. #Bangladesh #CoxsBazar #BreakingNews pic.twitter.com/xJxPpYMxFu
— lamiah (@lamiah02022002) October 17, 2026

உடல்கள்

இதுவரை ஆறு உடல்கள் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காக்ஸ் பஜார் துணை ஆணையர் ஏ. மனன் தெரிவித்தார்.

உடல்களை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு முன்பு டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முத்தரப்பு ஒருநாள் தொடர்: வங்கதேசத்தை பந்தாடிய ஜிம்பாப்வே.. 99 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி
முத்தரப்பு ஒருநாள் தொடரில் வங்கதேசத்தை 99 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வீழ்த்தியது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் முத்தரப்பு ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.

இதில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் தலா ஒரு முறை மோதுகின்றன. முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்நிலையில், முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி அபுதாபியில் நேற்று தொடங்கி நடைபெற்றது. இதில் வங்கதேசம், ஜிம்பாப்வே அணிகள் மோதின.

ஜிம்பாப்வே

டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்தது.

3 விக்கெட்டுக்கு 24 ரன்கள் எடுத்து ஜிம்பாப்வே அணி தத்தளித்தது. 4வது விக்கெட்டுக்கு கிரெய்க் எர்வின் - பிரெண்டன் டெய்லர் ஜோடி இணைந்து பொறுப்புடன் ஆடியது. இருவரும் அரை சதம் கடந்தனர்.

இந்த ஜோடி 150 ரன்கள் சேர்த்த நிலையில் பிரெண்டன் டெய்லர் 81 ரன்னில் அவுட்டானார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எர்வின் 93 ரன்னில் ஆட்டமிழந்தார்.

வங்கதேசம் சார்பில் தஸ்கின் அகமது 3 விக்கெட்டும், ஷோரிபுல் இஸ்லாம், சயீப் ஹாசன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் அணி களமிறங்கியது

வங்கதேசம்

வங்கதேசத்திற்கு பவுலிங்கில் டப் கொடுத்த ஜிம்பாப்வே வங்கதேச அணியை 172 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வங்கதேசதின் தன்சித் ஹாசன் அதிகபட்சமாக 46 ரன்கள் எடுத்தார். சைப் ஹாசன் 26 ரன்களும் ரிஷப் ஹொசைன் 23 ரன்களும் எடுத்தனர். ஏனையோர் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர்.

ஜிம்பாப்வேயின் பிராட் எவன்ஸ் 45 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாக செயல்பட்டார்.

வெலிங்டன் மசகட்சா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி, வங்கதேசம் வெற்றி இலக்கைத் துரத்தும் முயற்சியை முறியடித்தார்.

T20: மழையால் பாதியில் ரத்து: சமனில் முடிந்த இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் தொடர்
வெஸ்ட் இண்டீஸ் -  இந்திய அணிகள் இடையேயான கடைசி டி20 போட்டி மழை காரணமாக தடைபட்டது.

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது,

முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றியது.

அடுத்து நடந்த முதல் டி20 போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் ஷாய் ஹோப் அதிரடியால் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

3-வது போட்டியில் இந்திய அணி மீண்டும் வெற்றிது. 4-வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரை 2-2 என சமனிலை வகிக்கிறது.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 5வது டி20 போட்டி பெங்களூருவில் நேற்று தொடங்கியது.

தாமதம்

இரவு 7 மணிக்கு தொடங்க வேண்டிய இந்தப் போட்டி மழை காரணமாக தாமதமாக 9 மணிக்கு தொடங்கியது.

மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், போட்டி 9 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது.

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இந்தியா பேட்டிங்

இந்திய அணியின் சார்பில் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா முதலில் களமிறங்கினர்.

அபிஷேக் சர்மா 6 ரன்னும், அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன் 30 (10) ரன்களும், சஞ்சு சாம்சன் 16 (7) ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 22 (14) ரன்களும், திலக் வர்மா 7 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

மீண்டும் மழை

இதனிடயே மீண்டும் மழை குறுக்கிட ஆட்டம் நிறுத்தப்பட்டது. இந்திய அணி 7.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் எடுத்தது.

நமன் திர் 24 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் கீமோ பால் மற்றும் ஸ்பிரிங்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

ரத்து

மழை தொடர்ந்து பெய்ததால் போட்டி அத்துடன் ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

இதனால் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் (261 ரன்கள்) தொடர்நாயகன் விருது பெற்றார்.

சென்னையில் மேகவெடிப்பு?.. கொட்டித் தீர்க்கும் கனமழை - மக்களுக்கு எச்சரிக்கை
சென்னையில் மேகவடிப்பு ஏற்பட்டதுபோல மழை பெய்து வருகிறது.

சென்னையில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னை மட்டுமின்றி காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் பல இடங்களில் மிக கனமழை பெய்து வருகிறது.

மேகவெடிப்பு?

சென்னையில் குறிப்பாக கத்திவாக்கம், பாரிமுனை மற்றும் திருவொற்றியூர் பகுதியில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

சென்னையில் கடந்த 3 மணி நேரத்தில் மேகவெடிப்பு போன்ற மழை பதிவாகி உள்ளது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.

அதிகபட்சமாக 3 மணி நேரத்தில் கத்திவாக்கத்தில் 26 செ.மீ., பாரிமுனை 25.5 செமீ, திருவெற்றியூர் 15 செ.மீ, தண்டையார்பேட்டை 10 செ.மீ, எண்ணூர் 9 செ.மீ, மணலி 9 செ.மீ, மாதாவரம் 8 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

தற்போது மேகங்கள் தென்சென்னையை நோக்கியும் நகர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

எச்சரிக்கை

இன்று இரவு முழுவதும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்கவும். மேலும் தாழ்வான பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக சென்னை வானிலை மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், அரபிக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா துர்கா பூஜை பந்தல் கூட்டநெரிசலில் 17 பேர் பலி - பிரதமர், ஜனாதிபதி இரங்கல் - ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவிப்பு
கொல்கத்தாவில் உள்ள துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு பிரதமர், ஜனாதிபதி, உள்துறை அமைச்சர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.

மேற்கு வங்க மாநிலம் வடக்கு கொல்கத்தாவில் முக்தா ராம் பாபு தெருவில் உள்ள சோர்பகன் சர்போஜனின் துர்கா பூஜை பந்தலில் இன்று மாலை மக்கள் கூடியிருந்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

பலர் மயங்கி விழுந்தனர். இதுவரை குறைந்தது 17 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. குறைந்தது 25 பேர் காயமடைந்தனர்.

மீட்பு

தகவலறிந்து கொல்கத்தா காவல்துறையினர், மாநில பேரிடர் மேலாண்மை மற்றும் தீயணைப்பு குழுக்களுடன் இணைந்து சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காயமடைந்தவர்கள் அருகிலுள்ள கல்கத்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும் 25 காயமடைந்த நிலையில், அவர்களில் குறைந்தது 15 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், முதலமைச்சர் சுவேந்து அதிகாரி கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களின் சிகிச்சை குறித்து விசாரித்தார்.

பூஜை ஏற்பாட்டாளர்களை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரிக்குமாறு அவர் உத்தரவிட்டார்.

VIDEO | Kolkata: Visuals from the incident spot. At least 17 people died and 25 others were injured in a stampede-like situation at a Durga Puja pandal in north Kolkata on Saturday evening.

As it started raining, people waiting outside the Chorbagan Durga Puja pandal rushed… pic.twitter.com/crjwDdGGmH
— Press Trust of India (@PTI_News) October 17, 2026

கூட்டநெரிசல் ஏற்பட்டது எப்படி?

மழையிலிருந்து தப்பிக்க, வரிசையில் நின்றிருந்த பலர் பந்தலுக்குள் நுழைய முயன்றனர். பின்னாலிருந்து அழுத்தம் அதிகரித்ததால், முன்னால் நின்றவர்கள் விழத் தொடங்கினர்.

சில கணங்களில், பலர் ஒருவர் மீது ஒருவர் விழுந்து நசுக்கப்பட்டனர். நேரில் பார்த்த ஒருவர், அவர் தனது மூன்று தோழிகளுடன் பந்தலை விட்டு வெளியேறிக் கொண்டிருந்ததாகக் கூறினார்.

பின்னாலிருந்து ஏற்பட்ட ஒரு பலமான தள்ளலுக்குப் பிறகு, மக்கள் கீழே விழத் தொடங்கினர். அவரது மூன்று தோழிகளும் கூட்ட நெரிசலில் சிக்கி நசுக்கப்பட்டனர்.

மக்களுக்கு மூச்சுவிடச் சிரமமாக இருந்தது. பின்னர், உள்ளூர்வாசிகள் பந்தலின் மற்றொரு பகுதியை உடைத்து, உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.

பிரதமர் இரங்கல்

பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளூர் நிர்வாகம் அனைத்து விதமான உதவிகளையும் செய்து வருவதாக பிரதமர் மோடி கூறினார்.

இழப்பீடு

இதற்கிடையில், இந்த விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து (PMNRF) தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி இரங்கல்

ஜனாதிபதி திரௌபதி முர்முவும் இந்த விபத்து குறித்து தனது இரங்கலைத் தெரிவித்தார்.

சமூக வளைத்தளத்தில் அவர் பதிவிட்டதாவது, "கொல்கத்தாவில் உள்ள துர்கா பூஜை பந்தலில் நிகழ்ந்த உயிரிழப்புகள் குறித்த செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.

அமித் ஷா இரங்கல்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "கொல்கத்தாவில் உள்ள சோர்பகன் பொது துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்த மிகவும் வருத்தமான செய்தி இப்போதுதான் கிடைத்தது. இது தொடர்பாக முதலமைச்சர் சுவேந்து அதிகாரியுடன் பேசினேன்.

இந்த விபத்தில் உயிரிழந்த பக்தர்களின் ஆன்மாக்கள் சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காயமடைந்தவர்களுக்கு நிர்வாகம் அனைத்து விதமான மருத்துவ வசதிகளையும் செய்து வருகிறது.

நாளை மேற்கு வங்கத்தில் உள்ள எனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்திவைத்துவிட்டு, காயமடைந்தவர்களைச் சந்திக்க மருத்துவமனைக்குச் செல்வேன்.

காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய துர்கா தேவியிடம் பிரார்த்திக்கிறேன்." என தெரிவித்துள்ளார்.